வெள்ளி, 30 ஜூன், 2017

National Doctors Day 2017
National Doctors day 2017 would be celebrated by the people all over the India on 1st of July, at Saturday.,,,,,,,,

மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...

ஆன்மீக உலகமும்
அறிவியல் உலகமும்
வியந்து பார்க்கும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்

கால கடிகாரமே
ஏன்
இப்படி கலைத்துப்போனாய் ...?

கரு முதல்

கல்லறைவரை

சேவை செய்தவரின் களைப்பை போக்க

ஏன்

இப்படி களைத்து போனாய்.....?

உலக சக்கரமே

என்ன பார்க்கிறாய் ...?

உனக்கு இணையாய் பயணம் செய்ய

இங்கேயும் ஆட்கள் உண்டு ..

ஆம்...நம் மருத்துவர்கள் கடவுள்கள் ...

மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...

உடுமலைப்பேட்டை ...எங்கள் குடும்ப டாக்டர்..கோமதி கஜலட்சுமி ,மற்றும் என் இனிய டாக்டர் நண்பர்கள் வெங்கடேஷ்(RV) ,ஜெயபிரகாஷ்(JP ) அவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...

Sivakumar Kumar added 2 new photos — feeling joyful at Brookefields.
June 29, 2015 at 11:24pm · Coimbatore ·

காக்கா முட்டை ......(பாட்டி சுட்ட தோசை )
கோவையில் இருக்கும் என் ஷ்யாமை ஆசை ஆசையாக பார்க்க வேண்டுமென்று என் அம்மா சுட்ட ரெண்டு தோசை அரைகுறையுடன் சாப்பிட்டுவிட்டு சந்தோசத்துடன் நேற்று ஷ்யாமுடன் மாத கடைசி வரும் பிரச்னை நடுத்தரவர்க்க பற்றாகுறை பட்ஜெட்உடன் சமாளித்தேன் .....சாக்லேட்ம்,பின்கர்ப்ரிண்ட்ஸ் சாபிட்டுவிட்டு காக்க முட்டை படம் பார்த்தால்....படத்துலயும் பாட்டி சுட்ட தோசையுடன் கதை ஆரம்பித்து piza வில் முடிகிறது ....என் ஷ்யாமிக்கு பிடித்த piza பர்கர் வேண்டுமென்று அடம்பிடிக்கா அடுத்த முறை வாங்கி தருகிறேன் சமாதான படித்திவிட்டு இரவு வீட்டுக்கு வந்தால்....அம்மா கேட்கிறாங்க தோசை சுட்டு வைத்து இருக்கிறேன் சாபிட்டுட்டு தூங்குட என்கிறார்கள்...விடாத கருப்பு மாதிரி ....விடாது தோசை நாள் ....காக்க முட்டை படம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அருமையான படம் ...👍💐💐💐💐💐

ஞாயிறு, 25 ஜூன், 2017


இன்று 25-06-2017 தேதி மதியம் 12 மணி முதல் மாலை 3 மணிவரை நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின்  கூட்டம் ..💐💐💐கொடுங்கியம் ஷண்முகம் ,🌹🌹🌹அரண்மனை செந்தில் ,🌹🌹🌹🌹மேகானந்தன் தலைமையில் மகிழுச்சியின்... மழைசாரலுடன்... மாலகோவிலில் இனிதாக துவங்கியது ..அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்கள் சரியான நேரத்திற்கு வந்து  நேரத்தின் மதிப்பு அறிந்து கலந்துகொண்டது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .

நமது உறுப்பினர்களின் சீட்டு ஏலம் பணிகள் முடிந்து.கணக்குவழக்குகளை சரிபார்த்து தங்கள் கடமைகள் முடித்துவிட்டு .


கிழ்கண்ட நிர்வாக குழுவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

1.வல்ல கொண்டம்மன் கோவில் நிலங்களை இந்தவருடம் ஏலம் விடும்போது நமது அறக்கட்டளையின் சார்பில் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டது .

2.அறக்கட்டளையின் வங்கி கணக்கு எண் ,வருமானவரி எண் தொடங்குவது என முடிவுசெய்யப்பட்டது .

3.நமது சொந்தம் தளி மாரிமுத்து ஆசிரியர் மற்றும் நமது அறக்கட்டளையின் உறுப்பினர் ,நிர்வாக குழு உறுப்பினர் ,அவரின் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்து  நம் சமுதாய இனத்திற்கும் ,தமிழகத்துக்கும் வழிகாட்டியாக திகழுந்துள்ளார் ..இந்நிகழ்வு தினமலர் செய்தி தாளிலும் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது ..👏👏👏👏👏அவரின் பணிக்கு நமது அறக்கட்டளையின் சார்பில்    நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது .


4.நிர்வாக குழு உறுப்பினர்களை மேலும் அதிகரிக்க ஆவண செய்யப்பட்டது

நிர்வாக குழு கூட்டம்  முடிந்து நமது சொந்தங்களின் அன்பால் மதிய உணவு அரண்மனை செந்தில் வீட்டிலும் 💐💐💐🌷🌷🌷,மேகானந்தன் வீட்டில் தேனீர் விருந்தும் 👍👍👍👍👍 அளித்து கம்பள விருட்சம் அறக்கட்டளை நிர்வாக குழு கூட்டம் இனிதாக முடிந்தது ...💪💪💪💪👍👍👍.





வெள்ளி, 23 ஜூன், 2017

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய நிதியியல் கல்வி.....!!

'சிறுகச் சேர்த்து பெருக வாழ்' என்பது பழமொழி. எனினும், சிறுகச் சேர்க்கும் போது கூட, பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்ய வேண்டியதும் முக்கியம்.
பரீட்சை மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இன்றைய பள்ளிக் கல்வியில் இது போன்ற செயல்பாட்டு ரீதியிலான படிப்பினைகள் மிகவும் குறைவே. எனவே, குழந்தைகள் மற்றும் பணம் தொடர்பாக உங்களுடைய பெற்றோர்களின் கையேடு என்ன சொல்கிறது என்று பாருங்கள். இதன் மூலம் உங்களுடைய குழந்தைகள் பணத்தை எப்படி பொறுப்புடன் செலவு செய்யலாம் என்று உணரச் செய்யுங்கள்.

பணம் என்றால் என்ன??? குழந்தைகள் தாங்களாகவே தங்களுடைய வாழ்க்கைக்காக பணம் சம்பாதிக்கத் தொடங்கும் முன்னதாக அவர்கள் பணம் என்னவோ மரத்தில் காய்ப்பது போன்ற எண்ணத்தில் செலவு செய்து கொண்டிருப்பார்கள். எனவே, பணத்தை கையாளும் பொறுப்புகளில் குழந்தைகளை சிறு வயதிலேயே ஈடுபடுத்தி, நிதிக்கல்வியை அவர்களுக்கு சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் முதிர்ச்சி கூட்டல் அல்லது கழித்தல் என கணக்குகளைக் கற்றுக் கொள்ளும் முன்னரே குழந்தைகள் பணத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறார்கள். 4-வயதான குழந்தைக்கு கூட தன்னுடைய தந்தை பணத்தை ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து எடுக்கிறார் என்று தெரியும். எனினும், பெற்றோர்கள் உழைத்தால் தான் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் புரிந்து கொள்ள, சற்றே முதிர்ச்சியான மனம் வேண்டும் மற்றும் அதன் பின்னர் தான் கற்றுக்கொள்ளும் செயல்பாட்டின் நுணுக்ககங்கள் தெரியத் துவங்கும். எடுத்துக்காட்டாக, தன்னுடைய தந்தை வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார் என்று தெரிந்து கொண்ட குழந்தை அவரைப் பார்த்து, 'இன்று வேலை எப்படி இருந்தது? என்று கேட்பார். 'நன்றாக இருந்தது', என்று தந்தை பதிலளிப்பார். உடனே குழந்தை 'நீங்கள் அதற்கு பணம் பெற்றீர்களா?' என்று கேட்க்கும் குழந்தைகள் உண்டு.

சேமிப்பு மனநிறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பணத்தைக் கொண்டு பொம்மைகள், மிட்டாய் போன்றவற்றை வாங்க முடியும் என்று குழந்தைகள் கற்றுக் கொள்ளும் போது தங்கள் கையில் கிடைக்கும் ஒவ்வொரு காசையும் சேமித்து வைத்துக் கொள்ள அவர்கள் நினைப்பார்கள். இந்த ஊக்கம் தான் குழந்தையை சரியான நிதி மேலாளராக வழிநடத்தி, இளைஞனாக கொண்டு வரும்.

இன்றைய விதை, நாளைய கனி குழந்தைக்கு நிதி தொடர்பான விழிப்புணர்வை இளம் வயதிலேயே கொடுக்கத் தொடங்குவது முக்கியமானதாகும். ஏனெனில், டீன்-ஏஜ் சிறுவர்/சிறுமிகள் இத்தகைய ஆலோசனைகளுக்கு அவ்வளவாக செவி கொடுப்பதில்லை. மேலும், பணத்தை செலவிடுவதில் உள்ள வழிகளிலே அவர்கள் பிஸியாக இருப்பார்கள்.

ஊக்கத் தொகையின் அருமை குழந்தைகளாக இருக்கும் போது சிறிய அளவிலான பணத்தை அவர்களிடம் கொடுத்து தினசரி செலவுகளை செய்யச் சொல்லுவது நல்லது. மேலும் செலவிற்கான கணக்கை அவர்களிடம் பெரியவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதுதான் நம்மை ஒரு கண்காணிக்கிறார் என குழந்தைகள் உஷாராக இருப்பார்கள். குழந்தைகள் வளரும் காலத்தில் பெரிய அளவிலான செலவுகளை சுயமாக செய்ய இந்த அனுபவம் உதவும்.

டீன்-ஏஜ் மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகள் கணக்குகள், கிரெடிட் அட்டைகள் மற்றும் கடன்களை பரிசோதித்தல் ஆகியவை கல்லூரி செல்பவர்களுக்கான ஆரம்ப கட்ட நிதி செயற்கல்வியாக இருக்கும். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வங்கி மற்றும் கடன் தொடர்பான விஷயங்களைப் பற்றி சொல்லித் தருவதன் மூலம், அவர்களுக்கு பணத்தை குறித்து ஒரு சிறந்த அறிவை அவர்கள் மனதில் புகுத்துகிறோம்.

முதலீட்டைப் பற்றியும் இளமையில் கற்க வேண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சந்தைகள் மற்றும் உண்மையான பணத்தைப் பயன்படுத்தும் முறைகள் பற்றி அந்த வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் இவர்கள் சிறுவையது முதலே பணத்தின் அருமையை உணர்ந்து வாழ்கையை சிற்ந்த முறையில் நடத்துவர்.

V.K.Sivakumar............9944066681......
Home Loans.....Coimbatore.Pollachi..Udamalpet..

வியாழன், 22 ஜூன், 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -கோவை திருப்பூர் மாவட்டம் -உடுமலைப்பேட்டை

ஆலோசனை கூட்டம்....

நமது தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -கோவை திருப்பூர் மாவட்டம் .மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும்

ஞாயிறு 25-06-2017 மாலை 3 மணி அளவில் நம்பர் 1.வக்கீல் நாகராஜன் வீதி ,உடுமலைப்பேட்டையில்  .நடைபெற உள்ளது .

கோவை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ..

இங்ஙனம்

M ராமு

கோவை திருப்பூர் மாவட்ட தலைவர்
தொடர்பு எண் -9942746386

மாநில செய்தி தொடர்பாளர்கள் :
 சிவக்குமார்  -9944066681
டிஜிட்டல் ராஜேந்திரன் -97883 77445

நம் கம்பள சமுதாயம் ஏன் ஆடு மாடு மேய்த்தல் தொழிலை தெய்வமாக நினைத்து பாடுபட்டார்கள் என்று இப்பொழுது நமக்கு புரிகிறதா ...?

ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்... அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்...

ராமசாமி பி.டெக் முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க... அவரின் பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த
மகிழ்ச்சியடைகிறார்கள்... ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க.... இனி மேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்...

ஆனால் மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்... வீட்டில் வசவுகள் தாங்க முடியவில்லை... வீட்டில் மட்டுமா?... சுற்றத்தார். நண்பர்கள் என்று அனைவரும் கரித்துக் கொட்டுகிறார்கள்...

அதுமட்டுமா?... ஆலோசனைகள் அள்ளி வழங்குகிறார்கள்... இட்லி கடை வை, காய்கறி விற்கப்போ, பெட்டிக் கடை வை, பால் வியாபாரம் செய், மளிகைக் கடை வை என்று..... மாடசாமியின் அப்பாவுக்கோ வேதனை... மகன் இப்படி செய்து விட்டானே என்று... மாடசாமியோ இடிந்து போய் விட்டான்... கடைசியில் ஒரு வழியாய் மனதை தேற்றிக் கொண்டு.. அம்மாவின் நகைகளை வங்கியில் வைத்து இரண்டு லட்சமும், அப்பாவிடம் இரண்டு லட்சமும் கடன் வாங்கி, நான்கு எருமைகள் வாங்கி பால் வியாபாரத்தை ஆரம்பிக்கிறான்...

ராமிசாமி க்ரடிட் கார்டு மூலம் புல்லட்  பைக் வாங்குகிறார்... மகிழ்ச்சியாய் அலுவலகம் செல்ல ஆரம்பிக்கிறார்... மாடசாமி TVS 50 வாங்குகிறார்... அதில் பால் கேன்களை கட்டிக் கொண்டு பால் வியாபாரத்தை கவனித்துக்கொள்கிறார்... இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்கிறார்கள்... ராமசாமி மகிழ்ச்சி பொங்க 'ஹாய்' என்று சொல்லி கையசைக்கிறார்... மாடசாமியோ அவமானத்துடன் தலையைக் குனிந்துகொண்டு 'ஹாய்' சொல்லி விட்டு தப்பித்து வீட்டுக்கு வேகமாக சென்று விடுகிறார்...

ஆறு மாதங்களுக்குப் பிறகு.......

ராமசாமி தான் வாங்கிய பைக் லோனில் 20 சதவீதத்தை கட்டியிருக்கிறார்.... மாடசாமி தன் அப்பாவிடம் வாங்கிய 2 லட்சம் கடனில் 1 லட்சத்தை எப்படியோ கட்டி விடுகிறார்... அதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிடுகிறார்... இப்போது மறுபடியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் கட்டவேண்டிய லோன் பாக்கி நினைவுக்கு வருகிறது... மாடசாமிக்கோ... தான் இன்னும் கட்டவேண்டிய ஒரு லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது......

ஒரு வருடத்திற்குப் பிறகு.........

ராமசாமி சம்பள உயர்வை எதிர்பார்க்கிறார்... பொருளாதார மந்த நிலை காரணமாக சம்பள உயர்வு இல்லை.... இப்போது அரை லிட்டர் பாலின் விலை 10 ரூபாயில் இருந்து 14 ரூபாயாகிறது... மாடசாமிக்கு 30% லாபம் கூடுகிறது... அப்பாவிடம் வாங்கின கடனை அடைத்து... அம்மாவின் நகைகளை வங்கியில் இருந்து மீட்டு விடுகிறார்... ராமசாமி தன் பைக் லோனை அடைத்து விட்டு, சொந்த லோனாக 2 லட்சம் 16% வட்டியில் வெளிநாட்டு வங்கியில் வாங்குகிறார்... அதைக் கொண்டு வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர்கள், LCD டிவி, லேப்டாப் என்று வாங்கி மகிழ்கிறார்... சுற்றத்தாரும் நண்பர்களும் வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நன்றாக சம்பாதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொள்கிறார்கள்... மாடசாமியோ... மேற்கொண்டு 12 எருமைகள் வாங்குகிறார்....

இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமிக்கோ தான் வாங்கிய 2 லட்சம் கடன் நினைவுக்கு வருகிறது... மாடசாமியோ கம்பீரமாக புன்னகைக்கிறார்... காரணம் அவருக்கு எந்த கடனும் இல்லை....

இரண்டு வருடங்களுக்குப் பிறகு...

ராமசாமிக்கு 10% சம்பள உயர்வு வருகிறது... அதைக் கொண்டாட குறைந்த வட்டியில் கார் லோனில் கார் வாங்குகிறார்...அந்த சமயத்தில் மாடசாமி... எருமைகள் மேய இடம் போதாமையால் 2 ஏக்கர் நிலம் வாங்குகிறார்... மேலும் அதில் மேய இரண்டு டஜன் எருமைகளும் வாங்குகிறார்... இப்போது பாலின் விலை 30% அதிகரிக்கிறது... இப்போது மாடசாமியின் வருமானம் 200% அதிகரிக்கிறது... மாடசாமி ஒரு ஆட்டோ வாங்கி... பால் வியாபாரத்தை கவனிக்கிறார்... இப்போது இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்... ராமசாமி கடன்வாங்கி வாங்கிய காரிலும், மாடசாமி சொந்த ஆட்டோவிலும் இருக்க..... இருவரும் புன்னகைத்துக் கொள்கிறார்கள்.....

நான்கு வருடங்களுக்குப் பிறகு..........

ராமசாமி 40 லட்சம் கடனில் அடுக்குமாடியில் ஒரு ப்ளாட் வாங்குகிறார்... மாடசாமியின் எருமைகளின் எண்ணிக்கை நூறைத் தொடுகிறது....மாடசாமி சொந்தமாய் ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்..... இப்போது மீண்டும் பாலின் விலை உயர்கிறது.... லிட்டர் விலை 40 ரூபாய்... மாடசாமியின் வருமானம் ராமசாமியின் வருமானத்தை விட 500% உயர்ந்திருக்கிறது... வேறு வழி
இல்லாமல் மாடசாமி ஒரு ஸ்கோடா காரும், ஒரு இன்னவோ காரும் வாங்குகிறார்.... இப்போது இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.... ராமசாமிக்கோ 40 லட்சம் கடனை நினைத்து பயங்கர டென்சன்... அதே மாதிரி மாடசாமிக்கோ சொந்தமாய் பால் பவுடர் தொழிற்சாலை ஆரம்பித்த டென்சன்... இப்போது அவரிடம் 25 பேர் தொழிலாளிகளாய் வேலை செய்கிறார்கள்....

ஐந்து வருடங்களுக்குப் பிறகு.....

ராமசாமியின் வருட வருமானம் 7 லட்சமாய் உயர்ந்திருக்கிறது... ஆனால் மாடசாமிக்கோ சொத்தின் மதிப்பு நான்கு கோடியாகவும், மாத வருமானம் 5 லட்சமாய் இருக்கிறது...
*
*
*
*
2008 ல் பாலின் விலை... லிட்டர்15 ரூபாய்... இப்போது 40 ரூபாய்... அப்போது தங்கம் பவுன் 12,500. இப்போது பவுன் 25,000. ஐந்து வருடங்களாக பொறியாளர்களின் சம்பள உயர்வு 30% மட்டுமே... ஆனால் பெரும்பாலான மக்கள் பொறியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக எண்ணிக் கொண்டுள்ளார்கள்......

நம் கம்பள சமுதாயம் ஏன் ஆடு மாடு மேய்த்தல் தொழிலை தெய்வமாக நினைத்து பாடுபட்டார்கள் இப்பொழுது நமக்கு புரிகிறதா ...?

புதன், 21 ஜூன், 2017

 படிப்புதான் நமக்கான மூலதனம் எனில் தெளிவாகப் படித்துவிட வேண்டும்......
 
 
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடிவுகள் வரும் போது ‘படிப்பு ஒரு பொருட்டே இல்லை’ என்று நிறையப் பேர் சொல்வார்கள். படிப்பு ஒரு பொருட்டே இல்லை என்பது வாஸ்தவம்தான். வேறு தொழில் வழியாக முன்னேறிவிடலாம் என்றால் அது சரி. ஆனால் படிப்புதான் நமக்கான மூலதனம் எனில் தெளிவாகப் படித்துவிட வேண்டும்.

‘ஏன் நல்ல காலேஜ்லதான் படிக்கணும்ன்னு திரும்பத் திரும்பச் சொல்லுற? சுமாரான காலேஜ்ல படிக்கிறவன் சம்பாதிக்க மாட்டானா?’ என்று கேட்பவர்கள் உண்டு. சம்பாதிக்கலாம். திறமையானவனாக இருந்தால் தம் கட்டிவிடலாம். ஆனால் வெகு காலம் பிடிக்கும். ஆரம்பச் சம்பளம் இருபதாயிரம் ரூபாய் என்பதற்கும் அறுபதாயிரம் ரூபாய் என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? 
சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் அறிமுகமானார். வட இந்தியர். பெரும் நிறுவனமொன்றில் தென்னிந்திய அளவிலான திட்டமிடலைப் பார்த்துக் கொள்கிறார். நிறுவனத்தின் கிளை கோவையில்  இருக்கிறது. நிறுவனமே வீடு ஒதுக்கி கார் ஒன்றையும் வழங்கியிருக்கிறது. அந்த வீட்டுக்கான வாடகையை நிறுவனம் கொடுத்துவிடுகிறதாம். எப்படியிருந்தாலும் மாதம் எழுபதாயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டியிருக்கும். அப்பேர்ப்பட்ட வீடு அது. அவர்கள் நிறுவனத்தில் CSR- Corporate Social Responsibility சம்பந்தமாக பேசுவதற்காகக் அழைத்திருந்தார். முதல் நாள் அலைபேசியில் பேசினோம். நேரமிருந்தால் ‘வீட்டுக்கு வாங்க’ என்றார். அலுவலகம் முடித்துச் செல்லும் போது வீட்டிற்குச் சென்றிருந்தேன். நாற்பது வயதில் ஒருவரை எதிர்பார்த்துச் சென்றேன். ஆனால் அவர் திருமணமாகாத பையன். அநேகமாக வயது முப்பதுக்குள்தான் இருக்கும். தனியாகத்தான் வசிக்கிறார்.
ஐஐடியில் பி.டெக் முடித்துவிட்டு ஐஐஎம்மில் எம்.பி.ஏ முடித்திருக்கிறார். அவருடைய சம்பாத்தியத்தையும் பொறுப்பையும் அடைய வேண்டுமானால் வெகு மூர்க்கமாக உழைத்தாலும் கூட இன்னமும் இருபது வருடங்கள் எனக்கு ஆகக் கூடும். அப்படியே உழைத்தாலும் அடைந்துவிடலாம் உறுதியாகவெல்லாம் சொல்ல முடியாது. எனக்கும் படிப்புதான் மூலதனம். அவருக்கும் அதுதான் மூலதனம். இருவருக்குமான வித்தியாசம் எங்கேயிருக்கிறது?
Foundation.
IIT JEE, AIIMS மாதிரியான தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்திற்குச் சென்று வந்தேன். அப்படியென்ன அவர்கள் சொல்லித் தருகிறார்கள் என்று தெரிந்து கொள்வதுதான் நோக்கமாக இருந்தது. ஆறாம் வகுப்பு மாணவர்களை அமர வைத்து அவனுக்கு கணிதம் மற்றும் அறிவியலுக்கான அடிப்படையைச் சொல்லித் தருகிறார்கள். எதையுமே மனனம் செய்யச் சொல்வதில்லை. ஒரு வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்பது சூத்திரம் என்று தெரியும். எப்படி அந்தச் சூத்திரத்தை அடைந்தார்கள் என்று இன்று வரைக்கும் எனக்குத் தெரியாது. ஆனால் அதைத்தான் அந்தப் பயிற்சி நிறுவனத்தில் சொல்லித் தருகிறார்கள். 
மாணவர்களின் மண்டைக்குள் கொட்டுவதற்கும், அவர்களுக்கு புரிய வைப்பதற்குமான வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன. மகியிடம் ‘இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன, அவற்றின் தலைநகரங்கள் என்ன’ என்றெல்லாம் கேட்பதுண்டு. சிலவற்றைச் சொல்வான். சிலவற்றை மறந்திருப்பான். அவன் மறந்த போது மீண்டும் நினைவூட்டுவேன். இதுதான் dumping. கொட்டி நிரப்புதல். அது அவசியமேயில்லை என்று புரிந்தது. ஒடிசாவின் தலைநகரம் புவனேஸ்வர் என்பதை அவன் இப்பொழுது தெரிந்து என்ன செய்யப் போகிறான்? 
‘GK போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியதில்லையா?’ ‘Spell Bee போட்டிகளில் கொடி நட்ட வேண்டியதில்லையா?’ என்பார்கள். ஆணியே பிடுங்க வேண்டியதில்லை. இதெல்லாம் மெல்லத்தான் உறைக்கிறது. 
குழந்தைகளுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அடிப்படைதான். கணிதம், அறிவியல், சமூகம் என எதுவாக இருப்பினும் அடியிலிருந்து மேலேறிச் செல்ல வேண்டும். செங்கல் அடுக்குவது போல. பக்கத்து வீட்டுக் குழந்தை அப்படியே ஒப்பிக்கிறது என்பதற்காக நம் குழந்தையின் மண்டையில் குப்பைகளை நிரப்பத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு கொள்ளளவு இருக்கிறது. எவ்வளவு விஷயங்களைத்தான் அது மண்டையில் நிறுத்திக் கொள்ளும்? ஒரு கட்டத்தில் நினைவில் நிறுத்துதல் என்பதே குழந்தைக்குச் சலித்துப் போகிறது. அதன் கவனமும் சிதறத் தொடங்குகிறது.
‘நீங்க வேணும்ன்னா ஒரு க்ளாஸ் கவனிங்க’ என்றார்கள். பின்பக்கமாக அமர்ந்து கொண்டேன்.

கெப்ளர் என்று வெண்பலகையில் எழுதி ஆரம்பித்தார் ஆசிரியர். கெப்ளர் பற்றித் தெரியுமல்லவா? ஜெர்மானியர். அவரைப் பற்றிய வகுப்பு அது. அவரது வாழ்க்கைப் பின்புலம், இரவு நேரங்களில் அவர் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ணியது, அவர் கண்டறிந்த தொலைநோக்கி என்பது பற்றியெல்லாம் சொல்லிவிட்டு மேலே சுற்றிக் கொண்டிருக்கும் கெப்ளர் விண்வெளி ஆய்வுக்களத்தைப்(Spacecraft) பற்றிச் சொல்லத் தொடங்கினார். இந்தப் பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் கோள்களில் உயிர்கள் வசிக்கின்றனவா என்பதைக் கண்டறிய நாஸா அமைப்பானது 2009 ஆம் ஆண்டில் அனுப்பிய விண்வெளி ஆய்வுக்களத்தின் பெயர் கெப்ளர். சமீபத்தில் அதன் முடிவை அறிவித்திருக்கிறார்கள். இப்படி ஒரு விஞ்ஞானியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து கணிதவியல், வானியல் என்று வளைத்து சமீபத்தில் நாஸாவின் அறிவிப்பில் வந்து நிற்கிறார். எதுவுமே மனனம் செய்ய வேண்டியதில்லை. கதைதான். இதைத்தான் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். அவர்களின் மொழியில் இதுதான் foundation course.
எங்கே வித்தியாசம் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
ஐஐடியும் ஐஐஎம்மும்தான் கல்லூரிகள் என்பதற்காகவோ அங்கேதான் படிக்க வேண்டும் என்பதற்காகவோ இதைச் சொல்லவில்லை. கல்லூரி, படிப்பு என்பதெல்லாம் இரண்டாம்பட்சமாகவே இருக்கட்டும். குழந்தைகளுக்கான வெளியை நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதற்காக இதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நகர்ப்புற மாணவர்களுடன் போட்டித் தேர்வுகளில் ஏன் ஒரு கட்டத்தில் போட்டியிட முடியாமல் சலித்துப் போகிறோம் என்பதற்கும் இதுதான் அடிப்படை. திணிப்பதற்கும் புரிந்து கொள்ளுதலுக்குமிடையிலான வித்தியாசம். எங்கே பலவீனப்பட்டு நிற்கிறோமோ அங்கேயிருந்துதான் நாம் வேகமெடுக்க வேண்டும். நாம் புரிதலில்தான் பலவீனப்பட்டு நிற்கிறோம். 



செவ்வாய், 13 ஜூன், 2017

குறிக்கோள் ....

நம் தலைமுறை சொந்தங்கள் மிக தெளிவுடன் இருக்கிறார்கள் ...வாழ்க்கையில் தான் நினைத்த குறிக்கோளை அடைந்தவுடன்தான் அவர்களின் வாழ்க்கையை பற்றி தீர்மானிக்காரர்கள்...மகிழ்ச்சி  

ஞாயிறு, 11 ஜூன், 2017

ஒரு வரலாற்று மலை பயணம் ....

இன்று மதியம் திருமூர்த்தி அணையின் மலையின் மேல்பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாமரை பாழியில் உள்ள தண்ணீர் பகுதியையும் ,பாளையக்காரர்கள் வாழந்த பட்டி என்ற இடம் அதில் ஆடு ,மாடுகளை அடைத்து மேய்ச்சல் தொழிலை நடத்தி இருக்கிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க பகுதியாக இது உள்ளது.முதல் விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு இந்த மலைப்பகுதியில் நம் முன்னோர்கள் வாழந்த ,வசித்த பகுதியாக திகழுந்துள்ளது .எனக்கு வழிகாட்டிய புலவர் பழனிசாமி மாமா அவர்கள் 60 வயதுக்கு மேல் ஆகியும் சிறு குழந்தைபோல் ...இந்த சிறப்புமிக்க பகுதிகளை கண்டு நம் எதுலப்ப மன்னரின் வரலாற்று நூலை எழுதுவதற்கு அவருடைய இந்த அரும் பணி மதிப்புமிக்கது,,அங்கு வாழும் மலைமுதுவார்கள் சொல்லும் அவர்கள் முன்னோர்கள் சொல்லும் தகவல்கள் ஆச்சிரியமாக உள்ளது ...





மாக உள்ளது ...

வியாழன், 8 ஜூன், 2017

எங்க வடவள்ளி முருகன் மளிகை கடை அண்ணாச்சி ...உடுமலைப்பேட்டை ஜானிபேகம் காலனி முத்து அண்ணாச்சியம் வாழ்வில் மறக்கமுடியாது .....எங்க வடவள்ளி முருகன் மளிகை கடை அண்ணாச்சி ...உடுமலைப்பேட்டை ஜானிபேகம் காலனி முத்து அண்ணாச்சியம் வாழ்வில் மறக்கமுடியாது .....

வழக்கமா வாங்கறத விட இன்னைக்கு உறவினர்கள் வர்றதா சொன்னதால கூடுதலா பால் பாக்கெட் வாங்கனும்னு காலையில் எங்கள் பகுதியில் உள்ள அண்ணாச்சி கடைக்கு போயிருந்தேன். அப்போது அந்த கடையின் அண்ணாச்சி ஒரு பெண்ணிடம், என்னம்மா உங்க அக்காவுக்கு சுகப்பிரசவம் ஆயிடுச்சாமே, பொண்ணு பொறந்திருக்காமே, உங்கம்மா பிரசவத்துக்கு முன்னாடி ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருந்தாங்க, பிரசவம் ஆனதும் ஃபோன் பண்ணிச் சொன்னாங்க, பரவாயில்லை ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார், அந்தப்பெண்ணும் வெண்டைக்காயை பொறுக்கி எடுத்துக்கொண்டே இவர் கேட்டதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். பின்னர் எடுத்த வெண்டைக்காயை அந்தப்பெண் எடை மெஷினில் வைக்க அது 270 கிராம் காட்டியது. கால்கிலோ விற்கான விலையை பெற்றுக்கொண்டு, கூடவே ஒரு கறிவேப்பிலை கொத்தையும் கொடுத்தவாறே, நீ எப்பம்மா கல்யாண சாப்பாடு போடப்போறே என்றார், அந்தப் பெண் சிரித்துக்கொண்டே மெளனமாக நகர்ந்தார்.
நான் அண்ணாச்சி ஒரு பால் பாக்கெட் என்றதும், என்ன சார் ஆச்சர்யமா இருக்கு நீங்க எல்லாம் எங்க கடை பக்கம் வரவே மாட்டீங்க என்றார். அப்படி எல்லாம் இல்லே. ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வர்றப்போ ஏதாச்சும் தேவைன்னா மார்க்கெட்லயே வாங்கிடறேன். வரக்கூடாதுன்னெல்லாம் ஒண்ணும் இல்லே என்றேன். எங்க கடையிலும் வாங்கலாம்லே, நீங்க வரனும்கிற அவசியம் இல்லே, ஃபோன் பண்ணா நான் கொண்டு வந்து கொடுத்துடப்போறேன்னார். நீங்க எந்த பிளாட்ல இருக்கீங்கன்னு தெரியும். உங்க கார், டூவீலர் எல்லாம் என்ன கலர்ன்னும் தெரியும். நான் உங்க பிளாட்டுக்கு மளிகைப் பொருள் கொண்டுவர்றப்போ பாத்திருக்கேன் என்றார். சரி ஏதாச்சும் தேவைப்பட்டா சொல்றேன்னு சொல்லிட்டு பணத்தை கொடுத்துவிட்டு பாலை பெற்றுக்கொண்டு, ஃபோன் நெம்பரை வாங்கிக்கொண்டு புறப்பட்டபோது இன்னொரு வாடிக்கையாளர் வரவே, வாங்க சார், பையன் பிளஸ் டூலே நல்ல மார்க்காமே. அம்மா சொன்னாங்க, எந்த காலேஜ்ல சேக்கப்போறீங்க என்று பேசும் போதே நான் புறப்பட்டு விட்டேன்..
இப்படித்தான் தாங்கள் சார்ந்திருக்கும் பகுதியில் பெரும்பாலானவர்களை தெரிந்து வைத்திருப்பார்கள் இந்த சிறு காய்கறிகடைகள், மளிகைக்கடைகள் நடத்தும் அண்ணாச்சிகள். இவர்கள் அந்தப்பகுதியில் தங்களது வாடிக்கையாளர்களின் நல்லது கெட்டதுக்கு ஆஜராவதில் ஒருபோதும் தவறுவதில்லை. கடைக்கு பொருட்கள் வாங்க வந்தால் அக்கறையோடு பேசுவதிலும் தயங்கு வதில்லை. வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிவிட்டு, மறந்துபோய் பர்சை வீட்ல வச்சுட்டு வந்துட்டேன் நான் போய் பணம் எடுத்துகிட்டு வந்து பொருட்களை வாங்கிக்கறேன்னு சொன்னாலும் இவர்கள், அதனால என்ன, நீங்க எடுத்துட்டுப் போங்க, மறுபடியும் எப்போ வர்றீங்களோ அப்போ கொடுத்தா போதும் என்பார்கள்.. இதெல்லாம் ஒரு வியாபார யுக்திதான் என்றாலும், அதனை தாண்டி வாடிக்கையாளர்களிடம் நட்புகளையும், உறவுகளையும் வளர்த்துக்கொள்வதில் இவர்கள் திறமைசாலிகள்.
இப்போ எங்கே பார்த்தாலும் மிகப்பெரிய அளவில் செயின்லிங்க் டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்துவிட்டன. ரிலையன்ஸ், மோர், ப்ரஷ், ஹெரிடேஜ், நீல்கிரீஸ், ஸ்பென்சர்ஸ், ஃபுட்வோர்ல்டு, பிக்பஜார் இப்படி முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த டிபார்ட்மென்ட்டல் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அனைத்துமே கிடைக்கும். ஆஃபர் என்கின்ற பெயரில் சில சமயங்களில் ஓரிரு மாதங்களில் எக்ஸ்பையரி ஆக உள்ள பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர முயற்சிப்பார்கள். விற்பனை ஆகாத ஓல்டு ஸ்டாக்கினை பை ஒன் கெட் ஒன் என்று தள்ளிவிடுவார்கள். எல்லாமே பெரும்பாலும் எம்.ஆர்.பி ரேட்தான். பார்கோடு ஸ்கேனிங் சிஸ்டம்.
கிலோ வெண்டைக்காய் 40 ரூபாய் என்றால் நாம் 270 கிராம் எடுத்தால் அந்த 20 கிராமிற்கும் சேர்த்து பில் ஆகிவிடும். என்னதான் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தாலும், கவுன்ட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் இயந்திரத்தனமாகவே இருப்பார்கள். அதுமட்டுமல்ல இந்த மாதம் ஒருவரை பில்லிங் செக்ஷனில பார்த்தால் அடுத்த மாதம் அவர் அங்கே பணியில் இருக்கமாட்டார். வாங்கும் பொருட்களுக்கு பணமாகவோ அல்லது டெபிட் கிரெடிட் கார்டுகள் மூலமாகவோ பணம் செலுத்தவேண்டும். கடன் கண்டிப்பாக கிடையாது. இந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர்களின் முதலாளிகள் எங்கோ இருப்பார்கள். எல்லாமே சிஸ்டம், பார்கோடு,ஸ்கேனிங் சாப்ட்வேர், வேலையாட்கள் என்றுதான் இங்கே இருக்கும். வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்குகின்றனர், அவர்கள் பணம் பெறுகின்றார்கள் இவற்றை தவிர்த்து அங்கே எதையும் எதிர்பார்க்கமுடியாது. கருவேப்பிலை என்றாலும் பணம்தான்.
அண்ணாச்சிகள் என்று சொல்லக்கூடிய இவர்கள் எங்கோ ஒரு மாவட்டத்தில் பிறந்து பிழைப்பு தேடி வேறுமாவட்டத்தில் உள்ள சிற்றூர்களுக்கும், சென்னை போன்ற பெரு நகரங்களில் புதிதாக உருவாகும் குடியிருப்புகளுக்கும் இவர்கள் வந்து காய்கறி மளிகை கடை என்று ஆரம்பிக்கின்றார்கள். பலரது குடும்பங்கள் இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தினால் மூனு வேளை சாப்பாட்டையும், தங்கள் பிள்ளைகளையும் படிக்கவைக்க முடியுது.
ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள்தான் தற்போது எங்கு பார்த்தாலும் சூப்பர்மார்க்கெட்டுகளை திறந்து ஏராளமான விளம்பரங்களை மீடியாக்களில் தந்து பொதுமக்களை தங்கள் பக்கம் இழுக்கப்பார்க்கின்றனர். அவர்கள் பலவேறு துறைகளில் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றார்கள்.
ஆனால் இந்த தொழிலையே நம்பி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் பிழைப்பு நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு போட்டியாக நிற்கின்றார்கள். இவர்களை இவர்களது வாடிக்கையாளர்கள் யாரும் பார்த்தது கூட இல்லை. யாரென்றே தெரியாத, இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இவர்களை தெரிந்தோ தெரியாமலோ மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றோம்.
பிரம்மாண்டமான கட்டிடங்களில் கண்ணாடிகள் பொருத்தி ஏசி வசதி செய்யப்பட்ட, நீட்டான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள், கண்ணில் பார்க்கும் பொருட்களை தேர்வு செய்து வாங்கும் வசதி, டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வசதி, இவற்றை பலர் விரும்புவதால் அண்ணாச்சிகளின் கடைகளில் வியாபாரம் கடந்த சில வருடங்களில் சற்று மந்தமாகித்தான் போனது. ஆனால் இதுபோன்ற சூப்பர்மார்க்கெட்டில் நூதனமான முறையில் தங்களுடைய பணம் பறிபோகின்றது என்பதைப்பார்த்து உஷாரான சிலர் தற்போது அவர்கள் பகுதிகளில் இருக்கும் அண்ணாச்சி கடைகளை நாட ஆரம்பித்துள்ளனர்.
சிலவளர்ந்த அண்ணாச்சிகளின் வியாபார மோசடிகளும், தில்லுமுல்லுகளும், பணமோசடிகளும், நில அபகரிப்புகளும் கணக்கில் அடங்காதவை, விற்கின்ற பொருட்களில் கலப்படங்கள் செய்தே வியாபாரம் செய்தவர்கள் இன்று கோடிகளில் புரள்கின்றார்கள் என்றாலும் கூட, அழுக்கேறிய சட்டையோடும், பணியனோடும், சுத்தமில்லாத கைகளோடும் பொருட்களை வாடிக்கை யாளர்களுக்கு கொடுத்தாலும் வாடிக்கையாளர்கள் மீதான அன்பும், அக்கறையும், உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதிலும் அண்ணாச்சிகளுக்கு நிகர் அண்ணாச்சிகளே.
இப்படி சிறிய முதலீட்டில் தொழில்கள் நடத்தி குடும்ப வாழ்க்கையை நகர்த்திக்கொண்டுவரும் அண்ணாச்சிகளுக்கு பொதுமக்களாகிய நாம் ஆதரவு அளிப்பதில் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது........👍💐💐💐💐
👉அன்பார்ந்த நமது  கம்பள  சொந்தங்களுக்கு. நாங்கள் இந்த குருப்ஸ் ஆரம்பித்ததின் நோக்கம் நமது சமூகத்தினர் என்னதான் விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் இன்னும் விழிப்புணர்வும்,வழிநடத்தட ஆள் இல்லாமலும்  ஒதுங்கியே உள்ளனர் அவர்களையும் அவர்களை சார்ந்த சொந்தங்களையும் நாம் ஒன்றிணைக்க முயற்சிகள் நடந்தது கொண்டு வருகிறது இதற்கு தாங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகிறோம்🙏
❌❌அதற்கு உதவி செய்யாமல் நமது குருப்பிற்கு தேவையில்லாத நபர்களை சேர்த்துவிட்டும் அல்லது அவர்களாகவே குருப்பின் இணைப்பை கொண்டும் சேர்ந்து கொண்டு இது என்ன குருப்ஸ் என்னான்ணு தெரியாமலும் தவறான செய்திகளை அனுப்புகின்றனர்.
🤝யாராவது இக் குழுவில் இணையும் போது அவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு சேரவும் அப்படி செய்யாமல் இருந்தால் அட்மின் அவர்களை விசாரிக்கவும் உடனே குருப்பிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விசாரிக்க வேண்டுகிறேன்
அப்பொழுதுதான் குருப்பும் நன்றாக இருக்கும் நாமும் நமது சொந்தங்களும் அன்போடு இருப்போம் 🙏🙏🙏

செவ்வாய், 6 ஜூன், 2017

பள்ளியின் முதல் நாள்...ஒரு தந்தையின் பரிதவிப்பு ...

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.....
ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷியாம் சுதிர்யை ... முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து  கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....யானை சவாரி செய்ய நெனச்சா நாம யானையா மாறணும்!
குதிரை சவாரி செய்ய நினைச்சா நாம குதிரையா மாறணும்!
நாய் கதை சொன்னா நாய் மாதிரி நடிச்சி குறைக்கணும்!
கரடி கதை சொன்னா கரடியா மாறி கத்தணும்! இதையெல்லாம் மறந்து பள்ளிக்கு செல்லும் நாள் வரும்போது ..ஏதோ மனம் கனத்து விடுகிறது .

பள்ளியின் முதல் நாள்  4 மணி நேர பிரிவு ...எனக்குதான் தொண்டைக்குழயில் பேச்சே வரமுடியாமல் தவித்தது .(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ....அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க பயப்படாம   ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை மனதில் ஆயிரம் ஓட்டங்கள் .... மதியம் 12.30 மணி ...நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் ...ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் ...அவன் சிரித்துக்கொண்டே ...எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் ...அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் .... என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை   கற்று கொண்டவன் ...தைரியம் மட்டும் அவன் தன் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...




திங்கள், 5 ஜூன், 2017

ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.....
ஒவ்வொரு தகப்பனுக்கும் .. பள்ளியின் முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷியாம் சுதிர்யை ... முதன் முறையாக பள்ளிக்கு(பாரதி வித்யா பவன் -வேடப்பட்டி -கோவை ) LKG வகுப்புக்கு அழைத்து செல்லும் போது நான்கு வருடம் என் கழுத்தை பிடித்து  கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....பள்ளியின் முதல் நாள்  4 மணி நேர பிரிவு ...எனக்குதான் அழுகை அழுகையாக வந்தது(அழுகையை வெளிக்காட்ட முடியவில்லை ) ....அவன் சாகுவாசமாக சொல்லி சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க அழுகாம  ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் சீக்கரம் வாங்க என்று சொல்லி வழிஅனுப்பிவைத்தவன் ..பள்ளியின் முதல் நாள் 4 மணிநேரம் என் அலுவலக வேலையே ஓடவில்லை மனதில் ஆயிரம் ஓட்டங்கள் .... மதியம் 12.30 மணி ...நான் 12.00 மணியளவிலேயே சென்று பள்ளியின் முன்புற கேட்டில் ..அவருடைய வகுப்பு வாயிற்கதவுகள் என் கண்ணிமை மூடாமல் விழிவைத்து காத்துக்கொண்டுருந்தேன் ...ஷியாம் முகம் தெரிந்தவுடன் ஏதோ சொல்லமுடியாத உணர்வுகள் ...அவன் சிரித்துக்கொண்டே ...எனக்கு நாலு ப்ரிண்ட்ஸ் பெயரையும் ...அவங்க கிளாஸ் மிஸ் பெயரையும் சொன்னவுடன்தான் என் மனதில் அப்படியொரு சந்தோசம் .... என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மையை,புது புது நுணுக்கங்களை   கற்று கொண்டவன் ...தைரியம் மட்டும் அவள் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...



ஞாயிறு, 4 ஜூன், 2017

தளிஞ்சி.......எதுலப்ப மன்னர் ..பாளையக்காரர் ...

தளிஞ்சி.......எதுலப்ப மன்னர் ..பாளையக்காரர் ...

இன்று காலை சென்று வந்த தளிஞ்சி ...முதல் இந்திய விடுதலைக்கு எதுலப்ப மன்னர்  ஆங்கிலேயரை எதிர்த்து தன் படைவீரர்களுடன் கோட்டை. கொத்தலங்களுடன்  போர் புரிந்ததற்காக ஆதாரங்கள் ,கோட்டை சிதிலங்கள்,தாங்கள் வணங்கிய தெய்வம் கொண்டம்மா கோவில்  ,நம் பாளையக்காரர்களின் வீரத்துடன் கம்பீரமா காட்சி அளித்து கொண்டிருக்கிறார் ...அதை பார்க்கும்போது நம் சொந்தங்கள் யாராவது வந்து பார்க்கமாட்டார்களா என்று நம் முன்னோர்களின் கற்சிலைகள் நம்மை கம்பீரத்தோடு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் ..  இன்னும் சில தினங்களில் பதிவிடுகிறேன் ...பயணத்தில் மலையில் செல்லும் வழிகள் (வலிகள் )கடுமையான  ஏற்ற இறக்கங்கள் ...வாழ்வில் வரும் பல இடர்பாடுகளை களைந்து வாழ்க்கையை அழகாக அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் ...நம் சொந்தங்களுக்காக செய்யும் இந்த அறப்பணி ,சமுதாய பணி என் ஆத்ம திருப்திக்காக....