வெள்ளி, 30 ஜனவரி, 2026

ராஜபாளையம் நாய் குட்டியின் வரலாறு ❤️🥰📚🖋️📡🎙️

 ராஜபாளையம் நாய் குட்டியின் வரலாறு ❤️🥰📚🖋️📡🎙️

உலகில் உள்ள நாய் இனங்களில் 350 இனங்கள் மட்டுமே அதில் இந்தியாவை சேர்ந்தவை 7 . அதிலும் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை என இந்த நான்கு நாய்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவை. ராஜபாளையம் நாய்கள் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பரவலாக காணப்படுகின்றன.பாளையக்காரர்களால் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டவை.


விஜயநகர பேரரசு காலத்தில் பாளையக்காரர்கள் இங்கு குடியேறிய போது இந்த நாய்களும் இங்கே வந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த இனத்தின் எண்ணிக்கை சுருங்கி விட இன்று ராஜபாளையம் பகுதியில் மட்டும் காணப்படுவதால் ராஜபாளையம் நாய்கள் என அழைக்கப்படுகிறது.

ராஜபாளையத்தில் காணப்படுவதால் இதனை இன்று ராஜபாளையம் நாய் என அழைக்கிறோம் ஆனால் இவை ஆந்திர கர்நாடக பகுதிளை சேர்ந்தவை. இதனை ஆங்கிலத்தில்பொலிகார் ஹவுண்ட் என்பர் பொலிகார் என்றால் பாளையக்காரர்கள் அல்லது படைவீரர் என்று பொருள்.


 சிறப்புகள்:உலகில் ஒரு சில இனங்கள் மட்டுமே ஒரே நிறத்தில் குட்டிகளை ஈனும் சிறப்பு கொண்டது. அந்த வகையில் ராஜபாளையம் நாய்கள் அனைத்தும் ஒரே மாதிரியான வெள்ளை நிறத்தில் தான் காணப்படும். இளஞ்சிவப்பு நிற மூக்கு, மடிந்த காதுகள், வெள்ளை நிறம் இவை தான் இராஜபாளையம் நாய்களின் அடையாளம்.


 மேலும் இராஜபாளையம் நாய்களின் முக்கியத்துவம் கருதியே இந்திய அரசாங்கம் கடந்த 2005ம் ஆண்டு இராஜபாளையம் நாய்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவம் செய்தது.

தற்போது கோம்பை ரக நாய்கள் ராணுவத்தில் சேர்த்து பயிற்சியளித்து பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 

--

Sivakumar.V.K


Home Loan Consultant📚🖋️📡🎙️🌈🏠

செவ்வாய், 13 ஜனவரி, 2026

பொங்கல்

 பொங்கல் 

பொங்கல் என்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது தமிழ் பாரம்பரியத்தின் வேர் என்பதை அடுத்த தலைமுறையினருக்கு எப்படிக் கொண்டு செல்வது

பொங்கலின் அடிப்படைத் தத்துவம்நன்றி கூறுதல்’. சூரியன், கால்நடைகள் மற்றும் இயற்கையென நமக்கு வாழ்வளிக்கும் சக்திகளுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். இன்றைய மன அழுத்தம் நிறைந்த சூழலில் வாழும் இளைஞர்களுக்கு, நின்று நிதானித்து நன்றி சொல்லும் பண்பை வளர்ப்பது மிக முக்கியமானது

சிங்கப்பூர் ஒரு பல்லினச் சமூகம். இங்கே நம்முடைய தனித்துவத்தை நிலைநாட்ட நமது கலாசாரப் புரிதல் அவசியம். பொங்கல் திருநாளில் வேட்டி, சேலை அல்லது பாரம்பரிய உடைகள் அணிந்து, பொங்கலிட்டு, தமிழ் முறைப்படி கொண்டாடுவது இளையர்களிடையே ஒரு சமூகப் பிணைப்பை உருவாக்கும். அவர்களின் முன்னோர்களின் வரலாற்றோடும் வாழ்க்கைமுறையோடும் தங்களை இணைத்துக்கொள்ள ஒரு பாலமாக அமைகிறது.

இன்றைய இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர்கள். பொங்கல் பண்டிகை இயற்கையைப் போற்றும் ஒரு திருவிழா என்பதை அவர்கள் உணர வேண்டும். மண்ணையும், தண்ணீரையும், சூரியனையும் தெய்வ சக்தியாய் மதிக்கும் இந்தப் பண்டிகை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உந்துகோலாகவும் இருக்கிறதுமண்பானையில் உணவு தயாரித்து வாழை இலையில் உண்பது போன்ற பொங்கல் மரபுகளின் காரணங்கள் அறிந்தால், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்பண்டிகையில் அதிகம் நாட்டம் காட்டுவார்கள்

மின் திரைகளில் மூழ்கியிருக்கும் இன்றைய சூழலில், பொங்கல் பண்டிகை குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது. பொங்கல் பானையில் பால் பொங்கும்போது அனைவரும் இணைந்துபொங்கலோ பொங்கல்என்று முழங்குவது ஒரு கூட்டு மகிழ்ச்சியைத் தருகிறது. இது தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, உறவுகளை வலுப்படுத்துகிறது.


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்றார் பாரதியார். நகரமாக இருந்தாலும் நம் உணவு எங்கிருந்து வருகிறது என்பதை  நகர வாசிகளும் இளையர்களும் மறந்துவிடலாகாது. உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் எனும் கூற்றினைக் கேட்டிருப்போம். பொங்கல் என்பது வெறும் கிராமத்து திருவிழா அல்ல அது வாழ்வியல் முறை ....இன்றைய தலைமுறையுடன் கொண்டாடுவோம் ..பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் .....

 


ஞாயிறு, 11 ஜனவரி, 2026

சுங்குடி சேலைகள் ….

 


சுங்குடி சேலைகள் ….

 

மதுரை சுங்குடி சேலைகள் மதுரையின் பாரம்பரியச் சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குபவை ஆகும்சுங்கு என்ற தெலுங்கு சொல்லுக்குப் "புடவையின் மடிப்பு" எனப் பொருள்படும். மென்மையான பருத்தியினால் நெய்யப்பட்டு பல வண்ணப் பின் புலங்களில் வெண்மையான புள்ளிகளுடன் காணப்படுவதே இச்சேலைகளின் சிறப்பம்சமாகும் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தயாரிக்கப்படும்

 

செளராட்டிரர்கள் "மஸ்லின்" எனச் சொல்லப்படும் துணிவகைகளை நெய்வதில் கை தேர்ந்தவர்களாய் இருந்தனர்பட்டு மற்றும் ஜரிகை ஆடைகளில் மிகவும் விருப்பம் கொண்ட திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட போது இவ்வகை கலைஞர்களை தமிழ்நாட்டின் மதுரைக்கு அழைத்து இவர்களுக்கு ஆதரவு தந்தார். இவர்கள் தமிழ்நாட்டின் பருத்தி இழைகளுடன் பட்டு ஜரிகை இழைகளையும் சேர்த்து சுங்குடி என்ற புதிய துணிவகையை அறிமுகம் செய்தனர். பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களில் இடம் பிடித்த சேலைகள்,,,

தயாரிப்பு முறை

மென்மையான பருத்தியினால் தயாரிக்கப்பட்ட துணிகள் முதலில் நன்றாக சலவை செய்யப்பட்டு வெளுக்கப்படுகின்றன. பின்பு அத்துணிகளில் இயற்கை சாயமேற்று முறையில் கட்டங்கள் வரையப்படுகின்றன. அவைகளில் வேலைப்பாடுகளுக்கேற்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டங்களில் முடிச்சுகள் இடப்படுகின்றன. பின்பு அவை சாயமேற்றப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட சேலைகளில் முடிச்சிடப்பட்ட பகுதிகள் சாயங்களில் நனைவதில்லை. ஆதலால் வட்டமான வெள்ளைப் புள்ளிகளாக அம்முடிச்சுகள் தோற்றம் அளிக்கும். பல்வேறு வண்ணப் பின்புலங்களுடன் உருவான பின்பு முந்தானை மற்றும் அடிப்பகுதிகளுக்கு தனிச் சாயம் ஏற்றப்படுகிறது

வளர்ச்சி

தற்காலத்தில் பழமையான கட்டுதல் மற்றும் சாயமேற்று முறைகள் அரிதாகி நவீன முறையில் சாயம் ஏற்றப்பட்ட சேலைகளில் மெழுகு அச்சுகள் இடப்படுகின்றன. சுங்குடிச் சேலைகளுக்கு புவிக்குறியீட்டு எண் தரப்பட்டு அவை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி இந்த கலைஞர்களுக்கு கடனுதவி மற்றும் சந்தைகளுக்கான உதவிகளை அளித்துவருகிறது.