வெள்ளி, 31 அக்டோபர், 2025

நம்ம ஊரு வண்டி .......நம்ம வீட்டு வண்டி ....

 புதிய பொலிரோ மாடலின் முக்கிய நன்மைகள், புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையான  வடிவமைப்பு, தொடுதிரையுடன் மேம்படுத்தப்பட்ட உட்புறங்கள் மற்றும் மேம்பட்ட ஆறுதல், சிறந்த சவாரி மற்றும் கையாளுதல் போன்ற அதன் கரடுமுரடான தன்மை மற்றும் நவீன அம்சங்களின் கலவையாகும். இது நம்பகத்தன்மை, நடைமுறைத்தன்மை மற்றும் சக்திவாய்ந்த MHAWK75 இயந்திரம் ஆகியவற்றின் முக்கிய பலங்களைத் தக்க வைத்துக் கொள்கிறது, இது புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் நம்பகமான மற்றும் கடினமான SUV தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற தேர்வாக அமைகிறது.

வடிவமைப்பு மற்றும் ஆறுதல்

புதுப்பிக்கப்பட்ட அழகியல்: புதிய தடிமனான கிரில், ஒருங்கிணைந்த மூடுபனி விளக்குகள் மற்றும் மிகவும் நவீன தோற்றத்திற்காக வைர-வெட்டு அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

நவீன உட்புறம்: புதிய 17.8 செ.மீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங்-மவுண்டட் கட்டுப்பாடுகள் மற்றும் மேம்பட்ட வசதிக்காக மேம்படுத்தப்பட்ட இருக்கை குஷனிங் கொண்ட லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை அடங்கும்.

மேம்படுத்தப்பட்ட சவாரி தரம்: கடினமான நிலப்பரப்பிலும் கூட அதிக நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டிற்காக சஸ்பென்ஷன் "RideFlo" தொழில்நுட்பத்துடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் மற்றும் நடைமுறை

நம்பகமான இயந்திரம்: நிரூபிக்கப்பட்ட mHAWK75 இயந்திரத்தால் இயக்கப்படுகிறது, 55.9 kW சக்தி மற்றும் 210 Nm முறுக்குவிசையுடன் வலுவான செயல்திறனை வழங்குகிறது.

பாடி-ஆன்-ஃபிரேம் கட்டுமானம்: வலுவான பாடி-ஆன்-ஃபிரேம் கட்டுமானத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகிறது, இது அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் திறனின் முக்கிய பகுதியாகும்.

நடைமுறை: தாராளமான கேபின் இடம், பெரிய பூட் திறன் மற்றும் அதிக தரை அனுமதி ஆகியவற்றை வழங்குகிறது, இது நகரம் மற்றும் கிராமப்புற பயன்பாட்டிற்கு நடைமுறைக்குரியதாக அமைகிறது.

பாதுகாப்பு மற்றும் பிற அம்சங்கள்

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு: இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் ABS ஆகியவை அடங்கும்.

வசதி: ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் நினைவூட்டல்களைக் கொண்டுள்ளது.

நம்பகத்தன்மை மற்றும் ஆதரவு: மஹிந்திராவின் பரந்த சேவை நெட்வொர்க்கின் நன்மைகள் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளுக்கான நற்பெயர்.......

மகிழ்ச்சியான பயணங்கள் தொடரும் ....


திங்கள், 27 அக்டோபர், 2025

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

 சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி

மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்

அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா

அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.

33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்

திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன

மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.


புதன், 22 அக்டோபர், 2025

ராஜராஜசோழன்

 கோயில் கட்டிய பிறகு கடந்த 500 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், கோயில் சோழர் கால சிற்பங்கள் மறைத்து நாயக்கர்கால சிற்பங்கள், கோயிலில் கட்டிட அமைப்பு அதற்குள் இருக்கும் நுட்பமான வேலைப்பாடுகள் ஆகியவற்றை நீங்கள் பார்த்திராத கேட்டிராத செய்திகளை விரிவாகப் பார்ப்போம். 

தந்தை பெரியார் இந்தக்கோயிலைப் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கான  மனித உழைப்பில் உருவான ஒரு கல்சுவர், இதற்காக எவ்ளவு பணம், எவ்ளவு அறிவு ஆற்றால் வீணானது, இதனை ஒரு கல்வித்தலம் உருவாக்க செலவிட்டிருந்தால் நமது சமூகம் இன்னமும் எவ்ளவு மேம்பட்டிருக்கும் என்பதைக் கடந்த காலங்களில்  நேரில் பார்த்ததிலிருந்து நானே அறிந்து கொண்டிருந்தேன்.

இன்று மீண்டும் அந்தக்கோயிலுக்குள் நண்பர்களோடு ஒரு பயணம்.  பொதுவாக கோயிலுக்கு செல்லும் அனைவரும் கோயிலை வெளியிலிருந்து கோபுரத்தை பார்த்துவிட்டு சிவ, சிவ, ஓம் நமச்சிவாய நா , நம்ம குடும்பம் நமது உறவினர்கள் நல்லாஇருக்கணும், நானு நல்லாஇருக்கும் என்று பொதுவாக வேண்டிக்கொள்வர்கள்.

அந்த ஆவுடையை சிவலிங்கத்தை வெளியிலிருந்து சுமார் 25 அடிக்கு தள்ளி நின்று பார்த்து தரிசனம் செய்து விட்டு வருவது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் நாம், (நான்) அப்படி இல்லெ என்பதை இந்தப் பதிவு உங்களுக்கு தெரியப்படுத்தும். இதற்காக முனைவர் மூர்த்தீஸ்வரிக்கு சிறப்பு நன்றிகள்.

தமிழ் எழுத்துக்கள் 246 இதில் பயன்பாட்டில் இருப்பது 216 உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18. இதோடு நம் கருவறை சிவலிங்கம், ஆவுடை, கட்டிட அமைப்பு ஆகியவற்றைப் பொருத்திப் பார்க்கலாம். மேலும் அந்தக்கருவறை முழுமையாக ஒரு மனித உடலை ஒத்திருக்கின்றது என்பதையும் தெரிந்துகொள்வோம். இதனை நமக்கு தொல்லியல் துறை சார்பாக விளக்கிச்சொன்ன விஜயகுமார் என்பவர் கொஞ்சம் சிரத்தை எடுத்துசுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நமக்கு விளக்கமாகவும், கருத்துரையாகவும் பேசினார்.

இந்தக்கோயில் 7 ஆண்டுகளில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இந்தக்கருவறை விமானம் வரை மட்டுமே. அதற்குப்பிறகு அடுத்த வந்த அரசர்களால் கட்டப்பட்டது.  நாம் முதலில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் கண்காட்சியை பார்த்தோம். அதில் ஆயிரம் ஆண்டு கால நிகழ்வுகளை ஓவியங்களாகவும்,  கட்டிடங்களாகவும், தொல்லியல் துறை பராமரித்து வருவதை பார்த்தறிந்தோம்.

சோழர் கால ஓவியங்கள், அதற்குப்பிறகு மராட்டியா மன்னர்கள் ஓவியம், நாயக்கர் கால ஓவியம் எனத் தனித் தனியாக ஓவியங்கள் வரைந்திருப்பதும், அதன் உண்மைத்தன்மையினையும் அறியும்போது ஆயிரம்காலமாகியும் அப்படியே இருப்பதை பார்க்கும்போது கொஞ்சம் மெய் சிலிர்;க்கச் செய்யும்.

இயல்பாக ஆவுடை லிங்கத்தைத் தரிசனம் செய்யும் இடத்திலிருந்து இன்னும் கொஞ்சம் 15 அடி கூடுதலாக  ஆவுடைக்கு அருகில் சுமார் இரண்டடி வேறுபாட்டில் படிக்கு இந்தப்புறம் நின்று அந்த லிங்கத்தை பார்க்கும் போது கொஞ்சம் உடம்பு ஜில்லென்று இருந்தது. இது நான் பார்ப்பது நான்காவது முறை, அப்பொழுது சிவா, சசி, மாமா முகம் கொஞ்சம் அச்சத்தோடு இருப்பதைக் காண முடிந்தது. சுமார் பத்து நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று விட்டு இதே இடத்திலிருந்து கிழபுறம் கதவை விஜயகுமார் திறந்தார். அது தொல்லியல் துறையினர் மட்டுமே உள்ளே செல்லும் வழி, 

தரையிலிருந்து 216 அடிகள் விமான கோபுரம் வரை  உயரம் கொண்டது ராஜராஜசோழன் கட்டிய கோபுரம். அந்த கர்ப்பக்கிரகம் , ஆவுடை, லிங்கம் என அனைத்தும்  முதலில் உள்ளெ வைக்கப்பட்டு அதற்குப்பிறகு மணல் நிரப்பப்பட்டு யானைகளால்  சாரப்பள்ளம் மூலம் மண் வேய்ந்து ஒவ்வொரு கல்லாக இண்டர்லாக் எனும் முறையில் ஒவ்வொரு கல்லும், இடையில் சிறு துளை ஏற்படுத்தப்பட்டு அதனை ஒன்றுக்குள் ஒன்றைச்செருகி லாக் போட்டுக்கொள்ளும் வசதியோடு இது அமைக்கப்பட்டது. 

இவ்வாறுதான் இந்த முறையில்தான் கீழேயிருந்து மேல ஆகாய விமானம் வரை அனைத்துக்கற்களும்  ஒவ்வொன்றாகக் கோர்த்து அமைக்கப்பட்டது. உண்மையில் பெரும் வியப்பாகத்தான் இருக்கின்றது. இதற்கு அடிபானம் என்பது வெறுமனே ஆறடிதான் என்பது இதைவிட வியப்பு.

மனிதனின் கால் பகுதி முதல் தலைப்பகுதி வரைக்குமான உடலமைப்பு இந்தக் கட்டிடக்கலை உணர்த்துவதாக இருப்பதாக அவர்தெரிவித்தார்.  கால் பகுதி ஆறு முதல் 10 அடி வரை இருப்பதாகவும், அதற்கு மேல் ஆவுடை இருக்கும் பகுதியிலிருந்து முதல் மாடி கோபுரம் வரை 32 அடிகளும், அதற்கு மேல் இருப்பது 20 அடிகள் வரை உயரமாக இருப்பதும், இந்த 41 அடியில் நம் உடற்பகுதி இணைவதும், அதற்கு இடுப்புப் பகுதி முதல் தலைப்பகுதி வரைக்குமான பகுதியை வயிற்றுப்பகுதி, நெஞ்சுப்பகுதி மனிதனின் முழுமையான செயல்பாடுகள் இருப்பதையும் இந்த கருவறை மேலான கட்டிடங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மேலே விமானத்திற்குக் கிழே காது போன்ற அமைப்பும், அதற்குக் கிழே கழுத்து போன்ற அமைப்பும் இருப்பதையும்,  தலைப்பகுதி என்பது 81 டன் கொண்ட நான்கு கற்களைக்கொண்டதெனவும் தெரிவித்தார். 

நாம் வழிபாடு முடித்து முதற்தளத்தில் இருக்கும் சோழர் கால சிற்பங்களைப் பார்ப்பதற்கு உள்ளெ நுழைந்தபோது விஜயகுமார் உள்ளெ சென்று விளக்கு போட்டிருந்தார். ஒவ்வொரு சுற்றிலும், மூன்று மூன்று  குழல் விளக்குகள், ஒன்றை அணைத்து அடுத்ததை போட்டு வந்தார். முதலில் இந்தக் கருவறை சுவருக்கும் வெளிப்புறம் இருக்கும் (நாம் அனைவரும் பார்க்கும்) வெளிப்புற சுவருக்கும் இடைவெளி என்பது ஆறடி இருக்கும். இந்த ஆறடி முழுமைக்கும் மணல் போட்டு நிரப்பப்பட்டே பணிகள் நடைபெற்றுள்ளது. 

இந்த கட்டிடக்கலையின் சிறப்பை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் ஒரு சில செய்திகள் மட்டும் உங்களுக்காக  ஆவுடை வடக்கு நோக்கி இருப்பதும், கிழக்கு தெற்கு மேற்கு என மூன்று பக்கமும் இருக்கும் சிற்பங்களை நாங்கள் பார்த்தோம். இதனை பொதுவாகஅனைவரும் பார்க்க இயலாது.

கிழக்குப்பக்கம் சிவன் உருவமாக ஒரேகல்லில் 25 டன் கொண்டதாக இருக்கின்றது. அந்த உருவத்தைப்பற்றி மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் கருத்துரைத்தார். இந்தக்கல் இந்த உருவத்திற்கு முன்பு 50 டன் வரை இருந்ததையும், இங்கு கொண்டு வந்துதான் இந்த சிற்பம் செய்யப்பட்டதையும் உறுதிப்படுத்தினார். இதே போல் தெற்குப்பக்கத்தில் சிவன் சிலையும் மேற்குப் பக்கத்தில் லட்சுமி,சரஸ்வதி சிலையும் இருப்பதை விளக்கமாகச்சொன்னார்.

அப்போது கல்வியும், செல்வமும் இந்த சமூகத்திற்குத் தேவையானதென்பதை உணர்த்தும் அந்த லட்சுமி, சரஸ்வதி சிற்பம் இருப்பதையும், சரஸ்வதியின் கால்பகுதி மேற்பகுதியாக இருப்பதை சொல்லி தற்போது இவ்வாறு சமூகம் இல்லை எனவும், லட்சுமி கரமே எல்லாஇடத்தில் அதாவது செல்வமே முதன்மையாக இருப்பதையும், சரஸ்வதி பின்னால் இருப்பதையும் தெளிவுபடச் சொன்னார்.

அந்த லட்சுமி சரஸ்வதி சிலை பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் இரு வேறு அமைப்புகள் கொண்டதை அவர் சொல்லும்போதுதான் நமக்குத் தெரிய வருகிறது. லட்சுமியின் கண்கள் மையத்திலும், சரஸ்வதி கண்கள்  ஓரத்திலும், கையில் தாமரை இலை, இன்னொரு கையில் புத்தகமும், கற் சிற்பங்களாக இருக்கின்றன.

இடையில் பெரிய நூலாக மார்புக்கச்சை இருப்பதும், இன்னொரு பக்கம் இல்லாமல் இருப்பதும், இடை ஒரு பக்கம் பெருத்தும், ஒரு   பக்கம் சிறுத்தும் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார். மூக்கு, மார்பகங்கள், கை, கால் இவற்றின் பொருத்தப்பாடுகளையும் விளக்கிச்சொன்னார்.

சோழர் கால ஓவியங்களாக சிதம்பரத்தில் தேவாரம் பாடிய மூவர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என மூன்று பேரை அழைத்துச்சென்ற ஓலைச்சுவடிகள் எடுத்து வந்ததை ஓவியங்களாக இருந்தது, இது ஏடு தந்தானடி தில்லையிலே எனும் பாடலையும் நினைவு படுத்தி சென்றது.

இந்த ஓவியங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கும் போது உடல் சிலிர்க்கத்தான் செய்யும். இப்போது அந்த ஓவியங்கள் மிகவும் தெளிவாக இருப்பதை பார்த்தாலே அவர்கள் எவ்வாறான பூச்சுகள், கலவைகள் பயன்படுத்தினர் எனக்கேட்டால் அனைத்தும் இயற்கையான மூலிகைச்செடிகளிலிருந்து இது வரையப்பட்டது எனக்கேட்கும்பொது நம்மவரின் திறமைகயை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும்மேலாக அந்த ஆவுடைக்கு மிக அருகில் சுவருக்கு அடுத்த பகுதியில் இத்தனை நேரமும் நின்றுகொண்டு இதனைப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மீண்டும் வெளியே வந்தோம். வரும்போது, அதே இடத்தில் நின்று அனைவரும் மீண்டும் வழிபட்டனர். நான்கூட இதுநாள் வரைக்கும்வழிபாடு செய்யாதவன் நமது நண்பர்களுக்காகவும், குறிப்பாக பத்மாவின் மகன் சீனுக்காகவும் அந்த இடத்தில் நின்று மனதளவில் சில நிமிடங்கள் வேண்டிக்கொண்டேன். 

இதற்காக ஒவ்வொருவருக்கும் பிரசாதம் தரவேண்டும் என்பதற்காக அசோக்கிடம் நூறு ருபாய், சசியிடம் நூறு ரூபாய், சிவாவிடம் நூறு ரூபாய் எனத் தனித்தனியாக பெற்று நம்மை அழைத்துச்சென்ற விஜயகுமாரிடம் வழங்கி சிறப்புப் பிரசாதம் பெற்றுத்தர வேண்டினேன். அவரும் ஒவ்வொருவருக்கும் ஒரு பை பெற்றுக்கொடுத்தார்.

கோயிலை விட்டு வெளியே வரும்போது தாம் பிறந்த பயனை அடைந்ததாக சசி சொன்னது உண்மையில் நெஞ்சை நெக்குருக வைத்தது. மாமாவும், மீண்டும் மீண்டும் வழிபாடு செய்து அவர்களின் பக்தியை வெளிப்படுத்தியது. 

கோயிலின் மேற்குப்பகுதியாக வெளியேவந்து  அனைவரும் செல்லும் முன்புறம் அர்த்த மண்டபத்தின் வழியாக மீண்டும் மேலே ஏறினோம். படிகள் குறுகலாம் இயல்பாக ஏற முடியாமல் குறுகலாகவும், கொஞ்சம் உயரமாகவும் இருந்தது. என்னால் இயல்பாக அவருடன் பேசிக்கொண்டே சென்றுவிட்டேன், சசி, மாமா, அசோக்,சிவா மெதுவாகவே வந்தனர். இன்னமும் அந்த கருவறை வழிபாட்டிலிருந்து அவர்கள்வரவில்லை.

மிகவும் சிரமப்பட்டு மேலே சென்றதும், முதல் தளம், அதாவது நாம் பார்க்கும் மூன்று விமானங்களில் முதல் விமானத் தளம், இது நிலத்திலிருந்து 31 அடி உயரத்தில் இருக்கிறது. இது மூன்றாவது தளம், 

மண்டபத்திற்குள் செல்லும் போது ஒருவித அச்சத்துடன் அழைத்து சென்றார். யாரும் இல்லை நாங்கள் மட்டும்தான். சுமார் ஐந்து அல்லது எழு நிமிடங்கள் நடந்திருப்போம். முன்புறம் அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஒரு பெரிய கதவை திறந்ததும், ஒரு கைப்பிடியுடன் இரும்புக்கம்பி தடுப்பு இருந்தது. 

அதிலிருந்து மேலே பார்த்தால், யப்பா, வெறுமனே கூடாரம், உயரம், உயரமாக வெகு உயரத்தில் மிகவும் அழகாகவும், ஒரே சீராகவும், கட்டிடக்கலையின் உச்சத்தை வெளிப்படுத்தும் அற்புதமான ஒரு தோற்றத்தைக் கண்டதும், ஓஹோ . ஓஹோ இதுதான் நாம் வெளியிலிருந்து பார்க்கும் கோபுரத்தின் உட்பகுதி எனஅறிந்து கொண்டேன்.  ஒரு ஒலியைக் கொடுத்து அதன் பிறகு அந்த ஒலி எதிரொலிக்காமல் மேலே கோபுரம் செல்வதை அறிந்துணர முடிந்தது. 

விஜயகுமாரும், அதற்குத்தகுந்தாற் நாம் நிற்கும் பகுதி, கீழே ஆவுடை லிங்கம் இருக்கும் பகுதியில் மேல் பகுதிஎன்றும், ஆவுடைக்கும் மேல் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக இந்த இரும்பு கைப்பிடிசுவர் என்றும் இந்தக்கட்டிட அமைப்பு 26 க்கு 26 அகலம் கொண்டதெனவும், லிங்கத்தின் உயரம் 18 அடி எனவும் அகலம் 12 அடி எனவும் தமிழ் எழுத்துக்களை நினைவுகூறும் வகையில் வடிவமைக்கப்பட்டதை கூறினார். 

கரூவூர் சித்தர்தான் இந்தக்கோயிலின் பொறியாளர் என்பதும், அவருடைய உருவச்சிலை கீழே இருப்பதையும் பார்த்தோம். மேலும் கருவறை கோபுரத்தில் கருவூர் சித்தர், ராஜராஜசோழன் ஓவியங்கள் இருப்பதும் இதனைஉறுதி செய்தது. 

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளெ எனும் பாடலை திருவெண்ணெய் நல்லூரில் பாடியதையும், சம்பந்தர்  சேரமான் பெருமாளுடன் வெள்ளை யானையில் இவர் செல்ல. சேரமாள் வெள்ளைக்குதிரையில் சென்றதையும் அங்கு பெண்கள் களியாட்டம் ஆடியதையும் ஓவியங்களாகப் பார்த்தோம். 

லிங்கத்தின் பகுதியிலிருந்து விமானப்பகுதி வரைக்கும் 216 அடிகள் என்றும் நிலத்திலிருந்து(வானத்திலிருந்து) 247 அடிகள் என்றும் தமிழ் எழுத்துக்களை நினைவு கூறும் இந்தக் கட்டிட அமைப்பு இருப்பதையும் நினைவுபடுத்தினார்.

மேலும் இந்தப்பகுதி கால் பகுதி என்றும் என்பதற்காக  கோபுரப்பகுதியும் ,கருவறை சுவர்பகுதியும் பிரிந்திருப்பதும், இவ்விடத்தில் இணைவதும், இதிலிருந்து மேலே கழுத்துப்பகுதி சுமார் 174 அடிகள் அதாவது உடம்பின் பெரும்பகுதி இடுப்பிலிருந்து கழுத்துப் பகுதி வரை இணைந்திருப்பதாகவும் இதனைக் கூறினார் விஜயகுமார்.

இந்த சுற்றுப்பகுதியில் 108 சிவாலய நடனங்கள் பதிக்கப்பட்டிருப்பதும், அதில் ஒருசில வற்றைக் குறிப்பிட்டுச்சொன்னார். குறிப்பாக கட்டிடத்தில் கற்கள் முன்னமே அமைக்கப்பட்டு பிறகு செதுக்கப்பட்டதையும்  கட்டிடக்கலையின் நுட்பத்தையும் அறிய முடிகிறது. குறிப்பாக இதில் 67 ஆவது சிற்பத்தில் நிழல் வெளிச்சத்தில் மூன்று விதமான தோற்றங்கள், கண்கள் மட்டும் பெரிதாகவும், பற்கள் மட்டும்பெரிதாகவும், மூக்கு சிறுத்தும், உதடுகள் பெரிதாகவும் இருப்பதை மூன்று இடங்களில் நின்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பதை விஜயகுமார் செய்முறையாகக் காட்டினார்.  அனைவருக்கும் தெரிந்திருக்கும் எனக்குமட்டுமே அது அவ்வாறு தெரியவில்லை. 

மேலும் இந்த 108 லிங்க நடனத்தில் 80 மட்டுமே இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 28 நடன அமைப்புகள் செய்யுமுன்னரே  ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் கங்கைகொண்ட சோழ புரம் அமைக்கச் சென்றதனால் இதனை செதுக்கிய பெருந்தச்சன் அங்கு செல்லாமல் தன் மகனை அனுப்பி விட்டதாகச்சொன்னார். மேலும் இந்த சிற்பப்பணிகள் அனைத்தும் ஒரே பெருந்தச்சனால் செய்யப்பட்டதென்றும் அவனுக்கு ராஜராஜ பெருந்தச்சன் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது என்பதையும்கூறினார்.

இவ்வாறு இங்கு பணி செய்து விட்டு அவரது மகனுக்கு செய்ய இவரது மனம் ஒப்பாமல் இருந்ததாகவும், இவரது மகன் அங்கு சென்றுவிட்டதால் இந்த சிற்பப்பணிகள் நின்றுவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும், எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி, கலைஞர் ஆகியோர் முயற்சி செய்தும் இதனை முழுமை அடைய செய்ய இயலவில்லை எனவும் கூறினார். 
ராஜராஜசோழனுக்குப்பிறகு யாரும் அவரைப்போல இல்லை என்பதையும், யாருக்கும் அந்தத் தகுதி இல்லையென்பதையும், இது காலத்தின் கட்டாயம் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லிச் சென்றார். மேலிருந்து பார்க்கும் போது கீழே நடக்கும் மனிதர்கள் உருவம் கொஞ்சம் சிறுத்துத்தான் தெரிந்தது. 

மேலிருந்து வரும்போது  தொல்லியல் பணியாளர் விஜயகுமாரிடம் இவ்வாறு வாராஹி அம்மன் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் சசி கேட்டறிந்தார். அவரும் இந்த சிலை கடந்த  60 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்ணுக்குள் இருந்ததையும் நம்ம துறையினர் எடுத்து வெளியில் வைத்ததாகவும் கூறினார். உடனே சசி, இல்லெ ராஜராஜசோழன் எது செய்தாலும் வாராஹி அம்மனைக்கேட்டுத்தான் செய்வதாக ஒரு செய்தி உள்ளதே உண்மையா?எனக் கேட்டார் அவரும் அவ்வாறெல்லாம் இல்லை எனவும் அது பொய் செய்தி எனவும் கூறினார்.

கோபுரக்கருவறையிலிருந்து வெளியே வந்த பிறகு தென் கைலாயத்தைக் காட்டுவதாக கோபுரத்தில் இருக்கும்  சிவன், பார்வதி, விநாயகர், முருகன் சிலைகளைக் காட்டினார் விஜயகுமார். கோபுரத்தின் மூன்றாவது தளத்தில் இருக்கும் இது கீழேயிருந்து பார்த்தால் தெரிவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். இந்த இடத்திலிருந்த அந்த சிற்பங்கள்  மிக அழகாகத் தெரிந்தது.
புறாக்கள் எக்கச்சக்கமாக இருப்பதை பார்த்ததும், அப்துல் ரகுமானின் கவிதை நினைவுக்கு வந்தது.  புறாக்களுக்கு மட்டும் சமயம் இல்லை, சர்ச்சிலும், பள்ளிவாசலிலும், கோயில்களிலும் எப்பொழுதும் எந்நேரமும் தங்கிச் செல்கிறது. இது மனிதனால் முடியாதது, 

அசோக்கும் தனது பங்கிற்கு இடைமறித்து கேள்விகளைக் கேட்டான். நான்தான் ஒரு புதிய இடத்திற்கு வரும்பொது அவர்கள் சொல்லும் செய்திகளை முழுமையாகக் கேளுங்கள். பிறகு நம்முடைய சந்தேகங்களை கேட்கலாம் என்றேன். மேலும்,வரலாறு சார்ந்த செய்திகளுக்கும் புராணம், நம்பிக்கை சார்ந்த செய்திகளுக்கும் நிரம்ப வேறுபாடுகள் உள்ளது. வெறுமனே மக்கள் நம்பிக்கையை வைத்து காசு பார்க்கும் கூட்டத்தை இன்னமும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதன் வெளிப்பாடே இது.

இவ்வாறு தஞ்சை கோபுரத்தின் மேல் நின்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்துப்பார்க்கும் போது நமது நண்பர்களையும் அழைத்துச்சென்று காட்டவேண்டும் என மன உந்துதல் ஏற்பட்டது. 

ஞாயிறு, 5 அக்டோபர், 2025

உடுமலை நண்பர் நட்புப்பெருந்தகை கனகராஜ் அவர்களின் தோட்டத்திற்கு...

  இன்றைய காட்டுவழிப்பயணம், 🥰✒️📗🏠📡🎙️🌈🛵


உடுமலை நண்பர் நட்புப்பெருந்தகை கனகராஜ் அவர்களின்  தோட்டத்திற்கு...


திணைக்குளம், பள்ளபாளையத்திற்கும், ஜல்லிபட்டிக்கும் மையமான பகுதியில் உள்ள அவரது தோட்டம்  சென்றோம். 


போகும் வழியில் கரிசல் குளத்தில் பறவைகளை படம் பிடித்தோம். நமது பகுதியில் ஏழு குளப்பாசனத்தை உடுமலை வரலாற்று நூலில் மிகவும் விரிவாகப் பதிவு செய்திருப்போம். ஏனெனில் இந்தக் கரிசல் குளம் என்பது கரிசல் மண்ணில் இருக்கும் நீர் நிலை, அது மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்கு தங்கியிருக்கும்.  சித்திரை, வைகாசி மாதங்களில் மிக அதிகளவில் வெளிநாட்டுப்பறவைகள் இங்கு வந்து தங்கியிருக்கும்.

இது இந்த நீர் நிலையின் நீண்ட கால தொன்மையினையும், இந்தப் பகுதியின் நெடிய வரலாற்றையும் சொல்லாமல் சொல்லக்கூடிய செய்தி. மேலும், ஏழுகுளப்பாசனத்தின் மையமான பகுதி இந்த கரிசல் குளம், பரப்பளவில் மிகப்பெரிய அளவு கொண்டது. மடையர்கள், மிலேச்சர்கள் நாம் கேள்விபட்டிருப்போம். 

மடையர்கள் என்பது மடையை நீர் மடையை திறந்துவிடும் ஆபத்தான வேலையைச் செய்பவர்கள், நீர் மேலாண்மையில் அனுபவ அறிவோடு கொஞ்சம் அறிவியல் அறிவையும் கொண்டவர்கள் மிலேச்சர்கள். அவர்கள் இந்த நீர் மேலாண்மையோடு தொடர்பு கொண்டிருந்ததை ஏற்கனவே ஏழு குளப்பாசன வரலாற்றில் பதிவு செய்திருக்கிறேன்.



அவ்விடத்திலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டரில் நமது நண்பர்  தோட்டம் இயற்கையான, குளுமையான, அழகான , அற்புதமான அமைதியான இடத்தில் இருக்கிறது. இங்குதான் இன்று சென்று அவர்களது தோட்டத்தில்  இரண்டு மாம்பழச்செடிகளை நட்டு வந்தோம்.இன்று தோட்டத்தில் நண்பர் கனகராஜ் இரண்டு இளநீர் குடிப்பதற்காக வெட்டினார். ஆனால் உண்மையில் மூன்று பேர் சேர்ந்தும் குடிக்க முடியவில்லை. அவ்வளவு தண்ணீர் இருந்தது. அது மட்டுமல்லாமல்  தோட்டத்திற்கு மிக நெருக்கமாக தெளிந்த நீரோடை, இயற்கையாக சலசலவென சத்தத்தோடு அமைதியாக ஓடுகின்றது. 

பெரும் அமைதியான சூழல், பெரும்பாலான கவிஞர்கள், சிந்தனையாளர்கள் ஏன் இயற்கையைத் தேடிப் போகிறார்கள் என்றால், இவ்வாறான இடத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அதனை முழுமையாக அனுபவிக்க ஆசை இல்லாமலா இருக்கும்.

நமது நண்பர்  கனகராஜ் இரண்டு இடங்களில் அவரே குழி தோண்டி மரங்களை நட்டி, அதற்குப் பாதுகாப்பாக தென்னைஓலைகளையும் வைத்து பராமரிக்கும் பண்பு மரங்களையும், இயற்கையையும் அவர் நேசிக்கும் ஆர்வத்தை நமக்குக்காட்டியது. 

கோ கோ மரம், நெல்லிக்காய் மரம், சிறிய பாகற்காய் (மருந்துக்கான) மரம், நார்த்தங்காய் மரம், எலுமிச்சை மரம், மஞ்சள், பருத்தி என முழுமையாக இயற்கையை நேசிக்கும் நமது நண்பரை  இதுநாள் வரைக்கும் தவறவிட்டமைக்கு மிகவும் வருத்தத்தோடு இந்தப் பதிவை இடவேண்டி உள்ளது. 

பாதுகாப்பிற்கு இரண்டு நாய்களையும் வைத்துள்ளார். இவரும், இவரது தோட்டக்காவலர் சின்னதுரை தவிர மாலை 4 மணிக்கு மேல் யாரும் அந்தத் தோட்டத்தில்  கால் வைக்க முடியாது. அந்தளவிற்கு மிகவும் பாதுகாப்பான விலங்குகள். 


மேலும் நாற்பதடி கிணறு அந்தக்கிணறு நிறையத் தண்ணீர், கரைவளியில் இருப்பதால் இதெல்லாம் ரொம்ப சகஜம். இருப்பினும் கடந்த 1999 முதல் 2002 வரை கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், சமவெளிப்பகுதி அல்லது குடிமங்கலம் பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை இங்குக் கொண்டு வந்து கட்டிவைத்து கஞ்சி காய்ச்சி ஊற்றியதையும், அந்த வறட்சியிலும் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டதை குறிப்பிட்டுச்சொன்னார் நண்பர் .அப்போது ஆயிரம் அடிக்கும் கீழே தண்ணீர் இருந்ததையும் அதற்குப்பிறகு தண்ணீர் வரத்து ஆண்டு முழுமைக்கும் பச்சைப்பசலென்று  தண்ணீருடன் இருப்பதையும் குறிப்பிட்டுச்சொன்னார். 


நாம் ஒவ்வொருவரும் விவசாயத்தை மனதளவில் நேசித்தாலும், பசுமையை விரும்பினாலும் இது போன்ற நண்பர்களின் தோட்டத்திற்குச்சென்று  பார்க்கும்போதுதான் இன்னமும் மனமும் மகிழ்வாகவும் மன நிறைவாகவும் இருக்கும்.


 இயற்கையோடு சேர்ந்து நட்பின் அருமையினையும் அறிவோம்.


என்றும் அன்புடன் சிவக்குமார்📗✒️🎙️📡🥰💦🌧️🌳🌳🌳🌹💐🕊️🦅🦜








வெள்ளி, 3 அக்டோபர், 2025

புது வீடு கட்டும்போது மின் இணைப்புகள் எப்படி இருக்கவேண்டும்....

 புது வீடு கட்டும்போது மின் இணைப்புகள் எப்படி இருக்கவேண்டும்.... 

மின்சாதன பணிகளில் ஈடுபட்டு இருக்கும் உடுமலை மின் பொறியாளர்கள் கார்த்திக்குமார் சண்முகம் மாப்பிள்ளைகளுடன் கலந்து உரையாடி போது கிடைத்த தகவல்கள் .

வீடு மின் ஒயர் பலன்கள் ..நான் இதுவரையில் எழுதிய பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து புரிந்து கொண்ட மற்றும் என்னுடைய அனுபவத்தை வைத்து எழுதியவைகள் என்பதை தெரிவித்து அந்த வரிசையில் இந்த தொடர் பதிவையும் எழுதுகிறேன். இது ஒரு எலெக்ட்ரிகள் ஒயரிங் தொடர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 



ஒயரிங் செய்வதற்கு 1/8", 2/18", 3/18" மற்றும் 1/20", 3/20" என்று பல வகையான ஒயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 
அதாவது,

1/18" இதில் 18 என்ற எண் ஆனது ஒயரின் உள்ளாக இருக்கக்கூடிய மின்சாரம் செல்லும் கம்பியின் பருமன் ஆகும். மேலும் கேஜ் என்பார்கள் (18 கேஜ் என்று சொல்வார்கள் ).
1 என்ற எண் ஆனது 18 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் ஒரு கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்பதை குறிக்கிறது.

இதே போன்று தான்  2/18", 3/18", 1/20", 3/20" எல்லாமே ஆகும். 

3/20" என்பது மேலே சொன்னதைப் போன்றே  20 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் மூன்று கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்று அர்த்தம் ஆகும். 

நாம் மின்சாரம் கடத்தும் கம்பியை கையால் தொட்டால் உயிருக்கு ஆபத்து ஏர்படும்   என்வே தான் ஒயர் என்ற இன்சுலேசன் அமைப்பிற்கு உள்ளாக கம்பி இருப்பது போல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

சரி அது என்ன இன்சுலேசன் என்ற கேள்வி எழுகிறதா இதோ பதில்:


நாம் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இன்சுலேட்டர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மின் கடத்தா பொருள்கள் அனைத்தும் இன்சுலேட்டர்கள் என்று சொல்லலாம்.

உதாரணமாக:

கண்ணாடி, பிளாஸ்டிக்குகள், பேப்பர், பீங்கான், நன்றாக காய்ந்த மரக்கட்டை, ரப்பர் வகை மற்றும் காட்டன்கள். இவை அனைத்திலும் மின்சாரம் பாயாது. இதையே நாம் இன்சுலேசன் என்று சொல்கிறோம்.

சரி இனி விட்டதிலிருந்து தொடருவொம்,

இப்படி 1, 2, 3..... என்று கம்பிகள் இல்லாமல் அதற்கு பதிலாக அதிகமான பல சிறு சிறு கம்பிகள் உள்ள ஒயர்களும் இருக்கிறது. இதனை மல்டிபிளக்ஸ் ஒயர் என்று கூறவேண்டும்.

அதிக பருமன் உள்ள ஒயர்களை வாங்கும் போது sq.mm (ஸ்கொயர் எம் எம்) என்று சொல்லித் தான் வாங்க வேண்டும். 

உதாரணமாக:

16 sq.mm, 18 sq.mm, 20 sq.mm கொடுங்கள் சார் என்று கேட்டு வாங்க வேண்டும். 

மின்சாரத்தின் அளவைப் பொருத்தும், பயன்படுத்தும் மின் சாதனத்தின் மின்சார அளவைப் பொருத்து மட்டும் தான் நாம் ஒயரை வாங்க வேண்டும். 

கவணிக்க வேண்டியது:

கம்பியின் கேஜ் அதிகமாக இருந்தால் கம்பியின் பருமன்  சிறியதாக இருக்கிறது என்று அர்த்தம். கம்பியின் கேஜ் குறைவாக இருந்தால் கம்பியின் பருமன்  பெரியதாக இருக்கிறது என்று அர்த்தம். 

கம்பியின் பருமன் பெரியதாக இருந்தால் அதிக அளவு மின்சாரம் குறைந்த வேகத்தில் பாயும். கம்பியின் பருமன் சிறியதாக இருந்தால் குறைந்த அளவு மின்சாரம் அதிக வேகத்தில் பாயும். 

(தோட்டங்களில் பயன்படுத்தும் மோட்டார் பைப்புகளை நினைத்துப் பார்த்தல் தெளிவாகப் புரியும். பைப்பின் அளவு சிறியதாக இருந்தால் குறைந்த அளவு தண்ணீர் வேகமாக வரும். பைப்பின் அளவு பெரியதாக இருந்தால் தண்ணீர் அதிக அளவு தண்ணீர் குறைந்த வேகத்தில் வரும்.)

கம்பியின் பருமன் அதிகமாக இருந்தால் (கேஜ் எண் குறைவு) மின்தடை (resistance) குறைவாக இருக்கும் அப்படி என்றால் கரண்ட் ஆனது அதிகமாக செல்லும்.

கம்பியின் பாருமன் குறைவாக இருந்தால் (கேஜ் எண் அதிகம்) மின்தடை (resistance) கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்படி என்றால் கரண்ட் ஆனது குறைவாகச் செல்லும்.


வீட்டில் மின் ஒயர்கள் பலன்களாவன, மின்சாரத்தை பாதுகாப்பாக கடத்துவது, உபகரணங்களை இயக்குவது, மின் அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்ட ஒயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் தீ விபத்துகளைத் தடுப்பது, மற்றும் தரமான மின் இணைப்பை உறுதி செய்வது. சரியான வண்ண குறியீட்டுடன் கூடிய ஒயர்களைப் பயன்படுத்துவது, பராமரிப்பை எளிதாக்கும், மற்றும் மின்சார இணைப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். 
வீட்டு மின் ஒயர்களின் முக்கிய பலன்கள்:
  • மின்சாரத்தை கடத்துதல்: 
    மின் ஒயர்கள் மின்சாரத்தை மின் நிலையத்திலிருந்து வீடு வரை, மற்றும் வீட்டில் உள்ள வெவ்வேறு சாதனங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றன. 
  • சாதனங்களை இயக்குதல்: 
    ஃபேன், விளக்குகள், குளிர்சாதன பெட்டி போன்ற வீட்டின் மின் சாதனங்கள் அனைத்தும் ஒயர்கள் மூலம் மின்சாரம் பெற்று செயல்படுகின்றன. 
  • பாதுகாப்பு: 
    சரியான தடிமனும் தரமும் கொண்ட ஒயர்களைப் பயன்படுத்துவது, அதிக மின் அழுத்தத்தால் ஒயர்கள் சூடாகி தீவிபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. 
  • தரமான மின் இணைப்பு: 
    தரமான மின் ஒயர்களைப் பயன்படுத்துவது, மின்சாரம் சீராக பாய்வதை உறுதிசெய்து, சாதனங்களின் செயல்திறனை அதிகரிக்கிறது. 
  • பராமரிப்பு மற்றும் கண்டறிதல்: 
    வெவ்வேறு வண்ணங்களில் உள்ள ஒயர்கள், ஒரு மின்சுற்றின் எந்தப் பகுதிக்கு செல்கிறது என்பதைக் குறிக்கின்றன. இது பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளை எளிதாக்குகிறது. 
  • சரியான பயன்பாடு: 
    குறிப்பிட்ட மின்சாதனங்கள் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும் என்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு ஒயர்களைத் தேர்வு செய்வது அவசியம். 
சிறந்த மின் ஒயர்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவ

னிக்க வேண்டியவை:
  • சரியான தடிமன்: 
    அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் சாதனங்களுக்கு தடிமனான ஒயர்களையும், குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் சாதனங்களுக்கு மெல்லிய ஒயர்களையும் பயன்படுத்த வேண்டும். 
  • நம்பகமான பிராண்டுகள்: 
    தரமான மற்றும் நம்பகமான பிராண்டுகளின் மின் ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும். 
  • வண்ண குறியீடு: 
    மின்சார குறியீடுகளின்படி, வெவ்வேறு வண்ணங்களில் உள்ள ஒயர்கள், மின்சாரத்தை கடத்தும் மற்றும் தரை இணைப்புக்கானவை என்பதை புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும். 
தொடரும்..................