செவ்வாய், 25 ஜூன், 2019

உடுமலையில் ஜெய்வந்த் HP ஏஜென்சிஸ் ..சிறந்த வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்த நேரத்தில் விநியோகம் செய்தமைக்காக ..கொச்சியில் நடைபெற்ற HP சமையல் எரிவாயு வினியோகிசஸ்தர் சந்திப்பில் விருது பெற்றமைக்கான நிகழ்வு .உரிமையாளர் திரு .விஜயகுமார் -செல்வி தம்பதிகளுக்கு .வாழ்த்துக்கள் ..
ஜெய்வந்த் HP ...வக்கீல் நாகராஜன் வீதி ,(BSNL  அலுவலகம் எதிரில்)உடுமலைப்பேட்டை,தொடர்பு எண் : .94891 87696. 

திங்கள், 24 ஜூன், 2019

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க வங்கியை அணுகும் போது . . .
நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜ மாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர் த்து வைத்து வீடு கட்டினார்கள். இன் று வீட்டை கடனில் வாங்கி விட்டு, கடைசிக் காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார் கள்!
எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறு ப்புடன் பயன் படுத்த வேண்டாமா?
தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது வீட்டுக் கடன் தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய தவறேதும் செய்யவில்லை எனில், மற்ற கடன்களை எல் லாம் ஊதித் தள்ளி விடலாம்.

V.K.சிவக்குமார் ...9944066681
(வீட்டுக்கடன் பிரிவு -கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )

வீட்டுக் கடன் வாங்க ஒரு வங்கி யை நீங்கள் அணுகும் போது, அந்த வங்கியின் மேலாளர் உங்கள் கடன் விண்ணப்பப் படிவத்தை எந்தக் கோணத்தில் பார்ப்பார் என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.
வங்கி மேலாளர் முதலில் உங்களின் மாத / ஆண்டு வருமானம், கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் உங்களின் வருமானம், வீட்டிற்கு எடுத்துவரும் சம்பளம் எவ்வளவு என்கிற விஷயங்களை அலசி ஆராய்வார். நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் எந்தத் தொழிலில் உள்ளது என்றும் பார்ப்பார்.
சினிமா, அரசியல் துறைகளில் இருப் பவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது என்பதால் வீட்டுக்கடன் தர யோசிப்பார்கள். சுய தொழிலில் ஈடுபட்டு, வரு மான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் கடன் கிடைப்பது கடினமே. வேறு ஏதும் லோன் வாங்கி அதற்காக இ.எம்.ஐ. கட்டி வருகிறீர் களா என்றும் பார்ப்பார்கள்.
கடன் வாங்குபவரைப் பற்றிய அலசல்தான் ஆரம்பத்தில் பெரிதாக இருக்கும். இதற்காக உங் களிடமிருந்து பல டாக்குமென்டுகளைக் கேட்பார்கள். இதனால் நீங்கள் பொறுமை இழந்து, கோபம்கூட அடையலாம். நான் வீட் டை அடமானமாக வாங்கித்தானே கடன் தரப்போகிறீர்கள்? பிறகு ஏன் இத்தனை விசாரிப் பு? என்றுகூட நீங்கள் கேட்பீர்கள்.
ஆனால், வங்கிகள் உங்கள் வீட்டை விற்று தங்கள் கடனை செட்டில் செய்துகொள்ள விரும்புவதே இல் லை. அதனால் அவர்களுக்கு நஷ் டம்தான். எனவேதான், கடன் தரும் முன்பே உங்களைப் பற்றி முழுவது மாக அலசி ஆராய்கிறார்கள். வங்கி மேனேஜர் அடுத்து பார்க்கும் முக்கிய விஷயம், உங்கள் வயதைத் தான்! 55 வயதிற்கு மேல் உள்ளவர் களுக்கு பொதுவாக கடன் தரமாட்டார்கள் – அரசு பென்ஷன் வாங் குபவராக இருந்தால் தவிர!
இதற்குப் பிறகு உங்களது சிபில் ஸ்கோரை நிச்சயம் பார்ப்பார்கள்! நீங்கள் கடந்த காலத்தில் வங்கிக ளிடம் கடன் வாங்கி ஒழுங்காகச் செலுத்தாமல் இருந்திருந்தால், உங்க ளின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும். அது போன் ற சமயத்தில் வங்கிகள் உங்களு க்கு வீட்டுக் கடன் தராது.
மாதச்சம்பளத்தில் கழிவுகள்போக மீதி எவ்வளவு உங்களுக்கு கிடைக்கிறது என்று அலசுவார்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம் ரூ.45,000 என்று வைத்துக் கொள் வோம். கழிவுபோக, உங்களுக்கு கையில் கிடைக்கும் தொகை ரூ.40,000 எனில், இன் றைய வட்டி நிலவரத்தில் 30, 40 வயதிற்குள் இருக்கும் நபருக்கு, முறையே 16-18 லட்சம் வீட்டுக் கடன் கிடைக்கும் (20-30 வருடங் கள் கடன் காலம் என்று எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்!). அதாவது, உங்கள் வயது மற்றும் கடன் காலத்தைப் பொறுத்து உங்களது வீட்டி ற்கு எடுத்துச் செல்லும் மாதச் சம்பளத்தைப்போல் 40 – 45 மடங்கு கடன் கிடைக்கும்.

V.K.சிவக்குமார் ...9944066681
(வீட்டுக்கடன் பிரிவு -கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீங்கள் வீட்டிற்கு எடுத்து வரும் பணத்தில் அதிகபட்சமாக 40 சதவிகிதம் தொகையை இ.எம் .ஐ-ஆக கட்டுமளவிற்கு வங்கிகள் வீட்டுக் கடன் தரும். மீதி 60 சத விகித சம்பளம் உங்கள து அன்றாட வாழ்க்கைக்குத் தேவை யாக இருக்கும். எனவே, கணவன் – மனைவி என இருவரும் சம்பாதிக்கும் போது அதிக கடன் கிடைக்க வாய்ப்புண் டு.
இதுபற்றி எல்லாம் இவ்வளவு விரிவாக எடுத்துச்சொல்லக் காரணம், வங்கிகளின் பொதுவான வரை யறைக்கு உட்பட்டு நாம் கடன் வாங்கினால், நம் வாழ்க்கை யில் பெரிய சிரமங்கள் ஏற்படாது. நமது திருப்பிச் செலுத்தும் திறனை மீறி கடன் வாங்கும் போதுதான், பெரும் பாலானோர் பிரச்னையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
V.K.சிவக்குமார் ...9944066681
(வீட்டுக்கடன் பிரிவு -கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )

இளம் வயதில் கடன் வாங்கி வீடு வாங்கு வதில் தவறே இல்லை! ஆனால், வீட்டுக் கடன் வாங்கியபிறகு, நம் சம்பாத்தியத் தில் ஏதேனும் தடை ஏற்பட்டால் என்ன செய்வோம் என்பதை தீர்க்க மாக யோசித்துவிட்டு, கடன் தொகையை நிர்ணயம் செய்வது நல் லது.
இன்றைக்கு கைநிறைய சம்பளம் வருகிறது என்று கடன் வாங்கி விட்டு, நாளைக்கு திடீரென அந்த வேலையை இழக்க நேர்ந்தால், இ.எம்.ஐ. கட்டுவது பாதிப் படையும். இதனால் வாங்கிய வீட்டை குறை ந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம்கூட ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒரே வழி, ஆறு மாதத்திற்கு தேவையான இ.எம்.ஐ. மற் றும் வீட்டுச் செலவுக்கான பணத்தை எப்போதும் வங்கியில் வைத் திருப்பதே.
வீட்டுக்கடன் வாங்கும்போது அதிகமான பணத்தை வட்டியாகச் செலுத்த விரும்பாதவர்கள், வழக்கமாகச் செலுத்தும் டவுன் பேம ன்ட் தொகையைவிட அதிகமாகச் செலுத்துவது நல்லது. உதாரணமா க, ரூ.30 லட்சத்திற்கு ஒரு வீட்டை நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
வங்கி விதிகளின்படி, குறைந்தது ரூ.6 லட்சம் (20%) நீங்கள் டவுன் பேமன்டாகச் செலுத்தவேண்டும். மீதி 80சதவிகிதத்தை (ரூ.24 லட்ச ம்) வங்கிக் கடனாக தரும். 20 வருட கடன் மற்றும் 10% வட்டி என்கிற பட்சத்தில், மாத இ.எம்.ஐ. ரூ.23,161-ஆக இருக்கும்.
உங்கள் கையில் ரூ.6 லட்சம் இரு க்கும் பட்சத்தில், உங்களுக்கு இர ண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று, நீங்கள் உடனே வீட்டை வாங்கி விட்டு இ.எம்.ஐ-யைத் துவக்கி விட லாம்; அல்லது வீடு வாங்குவ தை சற்று ஒத்திப் போடலாம். உதார ணத்திற்கு, நீங்கள் 3 ஆண்டு காலம் ஒத்திப்போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
V.K.சிவக்குமார் ...9944066681
(வீட்டுக்கடன் பிரிவு -கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )
அந்த 3 ஆண்டுகாலத்தில்,கையில் இருக்கும் 6 லட்சத்தை ஒரு ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுங்கள். அதேபோல், நீங்கள் லோன் எடுத்திருந்தால் மாதத்திற்கு கட்ட வேண்டிய ரூ.23,161-ஐ ஒரு ஆர்.டி-யில் அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டு விடு ங்கள். மூன்று வருடம் கழித்துப் பார்க்கும் போது, ஆண்டிற்கு 8.5% வட்டி கிடைக்கும் என்ற பட்சத்தில், உங்கள் கையில் 17 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
அதே 30 லட்சம் ரூபாய் வீட்டிற்கு நீங்கள் இப்போது வெறும் 13 லட்சம் கடன் வாங்கினால் போதும். இதனால் நீங்கள் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ. வெறும் ரூ.12,545-ஆக மட்டுமே இருக்கும்!
ஆனால், இந்த மூன்றாண்டு காலத்துக்குள் வீட்டின் மதிப்பு உயர்ந்தி ருக்குமே! என நீங்கள் கேட்கலாம்! இனிவரும் காலத்தில் வீட்டு விலை அவ்வளவு வேகமாக உயரா து. அப்படியே உயரும் என்றாலும் உங்கள் வட்டி வருமானம் ஓரளவுக்கு அதை ஈடுகட்டிவிடும். இப்படி செய் வதால், உங்கள் ரிஸ்க் வெகுவாக குறைவதுடன், உங்களுக்கு நீங் களே ஒரு வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டதுபோல் இருக்கும்.
அதேபோல், வீட்டுக் கடன் வாங்குபவரின் ரிஸ்க் எடுக்கும் திறனை கன்ஸர்வேட்டிவ், மாடரேட் மற்றும் அக்ரெ ஸிவ் என பிரித்துள்ளேன். வேறு எந்தக் கடனும் இல்லாதபட்சத்தில் இந்த கேட்ட கிரியில் உள்ளவர்கள் எவ்வளவு உச்ச பட்சமாக வீட்டுக் கடன் எடுக்கலாம்.
வீட்டுக் கடனின் வட்டி 10% என்றும், திரு ப்பிச் செலுத்தும் காலம் 20 வருடங்கள் என்றும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் வயது, ஒற்றைச்/ இரட்டைச் சம்பாத்தியம், நீங்கள் இருக்கும் துறை போன்றவற்றை வைத்து உங்களுக்கு ஏற்ற கடன் தொகையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளு ங்கள்.

V.K.சிவக்குமார் ...9944066681
வாட்ஸாப்ப் எண் :9944066681
(வீட்டுக்கடன் பிரிவு -கோவை -பொள்ளாச்சி -உடுமலைப்பேட்டை )
உடுமலை புத்தகாலயம் -திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட்
நடத்தும் 8 ஆவது உடுமலை புத்தக திருவிழா வரவேற்பு அமைப்பு கூட்டம் ..

இந்த ஆண்டும் 2019 ஆகஸ்ட் 03 முதல் 12 முடிய 8 ஆவது உடுமலை புத்தக திருவிழா கலந்தாய்வு கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது .இக்கூட்டத்தில் கலந்துகொண்ட வாசிப்பை நேசிப்புவர்கள் தங்களது மேலான கருத்தைகளையும் ,வழிகாட்டுதல்களையும் ,ஆலோசனைகளையும் வழங்கி சிறப்பு செய்தது மிக்க மகிழ்ச்சி ....

உடுமலை புத்தகாலயம் விழாக்குழுவினர் .

வெள்ளி, 21 ஜூன், 2019

இன்று 21.06.2019 வெள்ளிக்கிழமை பாரதீய வித்யா பவன் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் நடைபெற்றது.
மகாத்மா காந்தியை நினைவு கூறும் விடுதலைப் போராட்டத்தின் நிகழ்வில்  தளி எத்தலப்ப மன்னரின் ...கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூல் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

 ஜி.வி.ஜி. கலையரங்கத்தில் நடைபெற்ற  காந்தியின்  150 ஆவது பிறந்த நாள் விழாவில்  அரங்கின் இரு பக்கமும் வைத்து சிறப்பு செய்யப்பட்டிருந்தது.   விடுதலைப்போராட்ட வீரர்களின் பட்டியல்

இதோ .  . .
1. வெங்கிடுசாமி நாயுடு – பொன்னேரி
2. கிருஷ்ணானந்தா தஃபெ. கோவிந்தசாமி
3. சாவித்ரி அம்மாள், போடிபட்டி
4. இராமநாயக்கர், பூளவாடி
5. வெங்கிடுசாமி நாயுடு, அம்மாபட்டி
6. வீராசாமி நாயுடு, பூளவாடி மேட்டுப்பாளையம்
7. பெருமாள்சாமி நாயுடு, பூளவாடி மேட்டுப்பாளையம்
8. பழனியப்ப நாயக்கர், பூளவாடி
9. சங்கோத்ரம நாயக்கர், உடுமலை
10. லிங்குசாமி நாயக்கர், உடுமலை
11. மருதாசலம் பிள்ளை, கணியூர்
12. மகாலிங்கம் பிள்ளை, உடுமலை
13. ஜானகியம்மாள், போடிபட்டி
14. கே.என்.குருசாமி, கணபதிபாளையம்
15. கருப்புசாமி கவுண்டர், பூளவாடி
16. நாச்சிமுத்து செட்டியார் , வாளவாடி
17. குமணன் செட்டியார், உடுமலை
18. டாக்டர். டி.பி.சாக்கோ, உடுமலை
19. வெங்கடகிருஷ்ணா அய்யர், உடுமலை
20. குமர நாயக்கர், பூளவாடி
21. மாரி  நாயக்கர், பூளவாடி
22. நல்லாண்டி நாயக்கர்,
23. முகமது, உடுமலை
24. கிருஷ்ண கவுண்டர், உடுமலை
25. ரங்கசாமி கவுண்டர், உடுமலை
26. குருசாமி கவுண்டர், புக்குளம்
27. சின்னத்தம்பி கவுண்டர், புக்குளம்
28. வேலப்ப நாயக்கர், குருவப்ப நாயக்கனூர்
29. ரங்க நாயக்கர், பூளவாடி
30. சக்ரபாணி நாயக்கர், உடுமலை
31. பழனி நாயுடு, பூளவாடி
32. கவிஞர் பூமி பாலகதாஸ், உடுமலை
33. தாண்டவகவுண்டர், உடுமலை.
34. எஸ்.ஆர்.நடராஜ் கவுண்டர், சாளையூர்
35. கு.கோபால்சாமி கவுண்டர். சாளையூர்
36. பெரியண்ண கவுண்டர், உடுக்கம்பாளையம்
37. நஞ்சப்ப கவுண்டர், உடுமலை
38. குப்பி நாயக்கர், உடுமலை
39. ஆறுமுக முதலியார், உடுமலை
40. முகமது கணியூர்
41. கிருஷ்ணன் குடும்பன், (1939-43,1945-49) ஜில்லா போர்டு மெம்பர்
42. கிருஷ்ண பண்டாரம், தளி அம்மாபட்டி
43. கோவிந்தசாமி நாயுடு ,வேலூர்
44. ஸ்ரீதரன்பிள்ளை,சாளையூர்.
45. ஆறுமுகநாயக்கர், பூளவாடி
46. மருதமுத்துபிள்ளை, உடுமலை
47. ரங்கநாயக்கர், பூளவாடி
48. பழனி நாயக்கர், பூளவாடி
49. நாச்சிமுத்து நாயக்கர், பூளவாடி
50. மொட்டைய நாயக்கர், பூளவாடி
51. ராமசாமி கவுண்டர், கொங்கல்நகரம்
52. கண்ணம நாயக்கர், பூளவாடி
53. காந்தி நாயக்கர், பூளவாடி
54. அவாண்டி நாயக்கர், உடுமலை
55. அப்பாச்சி நாயக்கர், உடுமலை
56. மௌனசுந்தர், வேலூர் வாளவாடி
57. மாரிமுத்து குடும்பன், குப்பம்பாளையம்
58. கந்தசாமி செட்டியார், பூளவாடி
59. கோவிந்தசாமி செட்டியார், பூளவாடி
60. சிதம்பரம் செட்டியார், உடுமலை
61. குப்புசாமி, தளி அம்மாபட்டி
62. கந்தப்பநாயக்கர், உடுமலை
63. அங்கமுத்துநாயக்கர், பூளவாடி
64. வேலுச்சாமி நாயக்கர், பூளவாடி
65. பெரியண்ணா நாயக்கர், பூளவாடி
66. கந்தப்ப நாயக்கர், உடுமலை
67. ஸ்ரீரங்கநாயக்கர், உடுமலை
68. கோதாமணி நாயக்கர், உடுமலை
69. வேலுச்சாமி நாயக்கர், உடுமலை
70. அங்கமுத்து நாயக்கர், உடுமலை
71. ராமசாமி, அமராவதி நகர்
72. சின்னமுத்துநாயக்கர், உடுமலை

நன்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இதைப்பதிவு செய்தவர்களுக்கும் (இதில் விடுபட்டுள்ள  விடுதலைப்போராட்ட ஈகிகளை தெரிந்தவர்கள் பதிவிட வேண்டுகிறோம்)👍🌱🌷⛱❤
Passport Office...(Coimbatore)

கடந்த சில நாட்களாகவே என் மதி மயங்கிக் கிடக்கின்றது. இது இந்தியாவா? நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா? என்று பலமுறை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன். 

காரணம் கோவையில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடந்த சமாச்சாரங்கள்.

கடவுச்சீட்டு தேதி முடியப் போகின்றது என்றார் நண்பர்,அவருடன் சென்றுவரலாம் சென்றபொழுது ,ஆகா இதை வைத்து இந்தத் துறை எப்படிச் செயல்படுகின்றது என்று இணைய தளம் வாயிலாக உள்ளே சென்ற போது பூ மாதிரி வழுக்கிக் கொண்டே சென்றது. எந்த தொந்தரவும் இல்லை. எந்த சிக்கலும் கடைசி வரைக்கும் உருவாகவே இல்லை. அடித்துத் திருத்தி மாற்றி என்று எத்தனை முறை செய்தாலும் அனைத்துக்குமான எளிமையாக இணையதளத்தை அமைத்துள்ளனர்.

உள்ளே நுழைந்து அவர்கள் கேட்ட ரூபாய் 1500 கட்டி முடித்தவுடன் தேதி குறிப்பிட்டு இந்த மணிக்கு வந்து விடவும் என்று முகவரியுடன் மின் அஞ்சல் வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவித்தனர். ஈரோடு, கோவையில் இரண்டு இடங்கள், தபால் நிலையம் என்று நமக்குத் தேவையான வழிமுறைகளையும் காட்டுகின்றனர். நமக்கு அருகே உள்ள இடத்தை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.

எந்த இடத்திற்குச் சென்றாலும் அரைமணி நேரம் முன்பே அங்கே சென்று விடுவது என் வாடிக்கை. ஆனால் இங்கே ஒரு மணி நேரம் முன்பே சென்று விட்டேன். வாசலில் நின்ற பெண்மணி குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு அங்கே அமரவும். கால் மணி நேரம் கழித்து நானே அழைக்கின்றேன் என்றார். குரலில் அதிகாரம் இல்லை.

அரசாங்க அலுவலகம் என்றாலே சற்று கலக்கமாக இருக்கும்? என்ன கேட்பார்களோ? எவ்வளவு கேட்பார்களோ? எப்படி நடத்துவார்களோ? என்று. இருபது நிமிடம் முன்னால் சென்ற போது அந்தப் பெண்மணி எங்கே செல்ல வேண்டும்? எங்கே அமர வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? என்று வகுப்பு போல எடுத்தார். கூட்டமே இல்லையே? மக்கள் உள்நாட்டில் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டார்களோ? என்று நினைத்துக் கொண்டே சென்று அமர்ந்தேன்.

நான்கு நபர்கள். நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆதார் அட்டை, பழைய கடவுச்சீட்டு இரண்டையும் காண்பித்தவுடன் நகல் எடுக்க அறிவுறுத்தினர். அதற்கும் உள்ளே வசதி வைத்துள்ளார்கள். முதல் ஆச்சரியம். மொத்தமே மூன்று நிமிடம்.
மீண்டும் வாங்கி பரிசோதித்து விட்டு அடுத்த நிலைக்கு அனுப்பினார். இங்கு மொத்த நபர்களையும் வழிகாட்ட ஒரு தனியாகப் பெண் ஒருவர் இருந்தார். தடுமாறுபவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்.

அடுத்த நிலையில் சென்ற போது அவர்கள் பரிசோதித்து விட்டு ஒரு டோக்கன் சீட்டுக் கொடுத்து அடுத்த நிலைக்கு நகர்த்தினர். மொத்தம் மூன்று நிமிடங்கள்.

டோக்கன் எண் திரையில் தெரிகின்றது. இப்போது முக்கியமான கட்டம். நம் கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு நம்மைப் புகைப்படம் எடுக்கின்றார். இரண்டு கைகளையும் வைத்து ஸ்கேன் செய்கின்றார். இரண்டு கட்டை விரலையும் ஸ்கேன் செய்கின்றார். அதிகபட்சம் ஐந்து நிமிடம்.
அங்கு ஒரு பெண் இருக்கின்றார். அவர் வழிகாட்டுகின்றார்.

இறுதியாக தலைமையாளரிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றார். நம்மைப் பார்த்துவிட்டு, ஆவணங்களைப் பரிசோதித்து விட்டு பழைய கடவுச்சீட்டில் கேன்சல் என்று குத்தி முடித்து, மூன்று நாளில் உங்களுக்கு வந்து சேர்ந்து விடும். வாழ்த்துகள் என்றார்.

தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரே இடத்தில் கூட கூச்சல் இல்லை. சப்தம் இல்லை. அடிதடி இல்லவே இல்லை. ஒரு ஊழியர் கூட ஏட்டிக்குப்போட்டியாக பேசவே இல்லை. அலுவலகம் மிக சுத்தமாக உள்ளது. ஹிந்தி, ஆங்கிலத்துடன் தமிழில் அதுவும் சுத்தமான பிழையில்லாத தெளிவான அழகான தமிழ்மொழியில் எல்லா இடங்களில் பளபளப்பான போர்ட்டில் வாசகங்கள் நம்மை வரவேற்கின்றது.

வழிகாட்டுகின்றது.

நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது கணக்கிட்டுப் பார்த்தேன். அதிகபட்சம் அரைமணி நேரம் இருக்கும். கனவுக்காட்சி போலவே இருந்தது. ஒரே காரணம் டாடா குழுமத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம்.

ஒரு முக்கியமான மக்கள் சேவையில் தொழில் நுட்பமும், தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய நிர்வாகமும் ஒன்று சேர்ந்தால் சாதாரண பொதுமக்களும் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதனை அன்று தான் முதல் முதலாகப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது என்றால் அது மிகையில்லை.
நன்றி நண்பருக்கு .......

வியாழன், 20 ஜூன், 2019

ஒரு அறக்கட்டளை தன் சமுதாயம் சார்ந்தும் ..பொதுத்தளத்தில் எப்படி செயல்படவேண்டும் ...கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு கொண்டிருப்பது ஒரு சிறுதுளி ஊக்கம் அளிப்பதாக உள்ளது ....தொடரும் அறக்கட்டளை பணிகள் ...இது குழு ஒருங்கிணைப்புடன் உறுப்பினர்கள் ,பொறுப்பில் இருக்கும் செயல்பட்டுக்கொண்டிருப்பதற்கு அனைவருக்குமான சிறிய பாராட்டுக்கள் ..இன்னும் சாதிக்கவேண்டிய பொறுப்புகள் மலையளவு உள்ளது ...தொடரும் பயணம் ...

நன்றி
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம்
உடுமலைப்பேட்டை 

புதன், 19 ஜூன், 2019

வேலை ...வெட்டி ...இல்லை ..

இது என்ன தலைப்பு ...?

பெண்கள் சொந்தமாக வணிக முயற்சியில் ஈடுபட உதவும் வணிக யோசனைகள்!

பெண்கள் தங்களது வீட்டிலிருந்தே வணிகத்தைத் துவங்க தொழில்நுட்பம் உதவுகிறது.
ப்ளாக் எழுதுதல், பேக்கிங், ஃபேஷன் டிசைன் என ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பணிபுரிகின்றனர். எனினும் பெண்கள் வீட்டில் செய்யும் வேலை அங்கீகரிக்கப்படுகிறதா? இந்தியப் பெண்கள் நாள் ஒன்றிற்கு 352 நிமிடங்கள் வீட்டு வேலைகளுக்காகச் செலவிடுகின்றனர். அதேசமயம் வீட்டு வேலைகளுக்காக ஒரு நாளைக்கு 52 நிமிடங்கள் செலவிடும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 577 சதவீதம் அதிகமாக செலவிடுகின்றனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.
பெண்களின் இந்தப் பங்களிப்பு முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை. ஆனால் இத்தகையச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுப் பொறுப்புகளைப் பெண்களே அதிகம் சுமந்தாலும் அவர்களது உழைப்பிற்கான ஊதியமோ பாராட்டோ கிடைப்பதில்லை. வீட்டு வேலைகளில் உதவ யாரும் இல்லாத நிலை, அவர்கள் வாழும் பகுதிகளில் குறைவான வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணிக்குச் செல்ல முடிவதில்லை.
எனினும் தொழில்நுட்பமும் இணையமும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடையும் நிலையில் பெண்கள் தங்களது வீட்டில் இருந்தே பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் நிதிச் சுதந்திரம் அடையமுடியும்.
பெண்கள் சுயமாக முயற்சியைத் துவங்க 5 வணிக யோசனைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மின்வணிகம் / மொத்த விற்பனை
பெண்கள் ஆர்கானிக் பொருட்கள், ஆபரணங்கள், புடவைகள், ஆடைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் சந்தைப்பகுதிகளும் மின்வணிகமும் வாய்ப்பளிக்கிறது.
இவற்றை அவர்களாகவேத் தயாரிக்கலாம் அல்லது வெளியில் இருந்து வாங்கி வீட்டிலிருந்தே விற்பனை செய்யலாம்.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வேறு நகரத்திற்கு மாற்றலாகி சென்றாலோ வெளிநாடுகளுக்கு மாற்றலாகிச் சென்றாலும்கூட உங்கள் வணிகத்தைத் தொடர்ந்து நடத்தலாம். ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களைப் பயன்படுத்தியோ அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியோ உங்களது பொருட்களை விற்பனை செய்யலாம்.

ப்ளாக் எழுதுதல்/கதை சொல்லுதல்
ப்ளாக் எழுதுபவர்களும் கதை சொல்பவர்களும் பணம் ஈட்டுவதில்லை என்கிற தவறான கருத்து மக்களிடையே காணப்படுகிறது. ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பாக ப்ளாக் எழுதும் மசூம் மினாவாலா மற்றும் ஆயூஷி பங்கூர் ஆரம்பத்தில் சிறியளவிலேயே துவங்கியுள்ளனர். ஃபேஷன் துறையில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகளிடையே பிரபலமாகியுள்ளனர்.
உங்களுக்கு எழுதும் திறன் இருக்குமானால் ஃப்ரீலான்ஸ் முறையில் உள்ளடக்கம் எழுதும் வாய்ப்பும் உள்ளது. ஏதேனும் ஒரு துறை அல்லது விரிவான மையக்கருத்தை தீர்மானித்ததும் டொமெயின் பெயரையும் ஹோஸ்டிங் ப்ரொவைடரையும் தேர்வு செய்து ப்ளாக் எழுதத் துவங்கலாம்.

விருந்தோம்பல் சேவை
தற்போது உலகம் முழுவதும் இருந்து வரும் பயணிகளுக்கு மக்கள் தங்களது வீட்டை தங்குமிடமாக வழங்குவதற்கான வசதியை உலகளவில் செயல்படும் ஆன்லைன் சந்தைப்பகுதியான ஏர்பிஎன்பி வழங்குகிறது. பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்பிஎன்பி உடன் கையெழுத்திட்டு நீங்கள் விருந்தோம்பல் செய்யலாம்.
உங்களுக்கும் உங்களது சொத்துகளுக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன் உங்களது விருந்தினரை நீங்களே தேர்வு செய்து கட்டுப்பாடுகள் விதிக்கலாம். மேக்மைட்ரிப் போன்ற பிற பயண ஏற்பாட்டு நிறுவனங்களும் ஹோம்ஸ்டே பட்டியலை வழங்குகிறது. எனவே உங்கள் வீட்டின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி நீங்கள் வருவாய் ஈட்டலாம்.

கேட்டரிங், சமையல், பேக்கிங்
வீட்டிலேயே பேக்கிங் செய்வது அல்லது கேட்டரிங் என உணவுத் துறை லாபகரமான பிரிவாக உள்ளது. உங்களது சமையல் திறனைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதுடன் சிறப்பாக வளர்ச்சியடையவும் முடியும். பலர் இவ்வாறு சிறியளவில் வீட்டிலேயே பேக்கிங் செய்யத் துவங்கி கேக் ஷாப், கஃபே, பேக்கிங் பள்ளிகள் என பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளனர்.
உங்களது திறனையும் தயாரிப்பையும் பரிசோதனை செய்ய உள்ளூரில் இருக்கும் மலிவு விலை சந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டிலேயே பேக்கிங் செய்பவர்களை அவர்களுடைய வாடிக்கையாளர்களுடன் இணைக்க அனுராதா காம்பி, அஞ்சத் லத் ஆகிய தொழில்முனைவோர் உருவாக்கியுள்ள ஹோம் bankers .com  போன்ற சந்தைப்பகுதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்களால் தரமான சுத்தமான உணவைத் தயாரிக்கமுடியும் எனில் வீட்டிலிருந்து டிஃபன் செண்டரை நடத்தலாம். ஒரு சில ஆர்டர்களுடன் சிறியளவில் துவங்கி படிப்படியாக வளர்ச்சியடையலாம்.
ஆன்லைன் வகுப்புகள்
தனிப்பட்ட நிதி, சமைப்பது, சுய மேம்பாட்டு புத்தகங்கள் என யூட்யூபர் சலோனி ஸ்ரீவாஸ்தவாவிற்கு யூட்யூபில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர். அதிகளவிலான பெண்கள் தங்களது பணிவாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள யூட்யூபைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
புடவை டிரேப்பிங், கணிதம் கற்றுக்கொடுத்தல், மேக்அப் பயிற்சி, அம்மாக்களுக்கும் குழந்தைகளுக்கும் வீடியோக்கள் என உங்களது மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு வருவாய் ஈட்டி பிரபலமாகலாம்.
பெண்கள் பயன்படுத்திக்கொள்ள ஆன்லைனில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எனவே நீங்கள் மற்றவர்கள் செயல்படுவதை கவனித்து கற்றுக்கொண்டு உங்களது முயற்சியைத் துவங்கலாம்.
உங்களுக்கு ஆர்வம் அதிகமுள்ள துறையைக் கண்டறிந்து நீங்கள் களமிறங்கலாம். சரியான பாதையில் பயணிக்க சிறிது அவகாசம் தேவைப்படலாம். ஆனால் அதன் பின்னர் வளர்ச்சியும் வெற்றியும் சாத்தியப்படும்.

Thanks for Tips...YS...

திங்கள், 17 ஜூன், 2019

பணத்தை வங்கியில் மாற்றும் போது நாம் தரும் ஆதார் கார்டு ஜெராக்ஸை மறுஜெராக்ஸ் எடுத்து யாரேனும்  நம் பெயரை பயன்படுத்தி தன் பணத்தை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது.

அதை தவிர்க்க  வழிமுறை இது...

ஆதார் கார்டு அல்லது ஐடி ப்ரூஃப் ஜெராக்ஸை வங்கியில் கொடுக்கும் போது ப்ரிண்ட் மேலேயே ஓரத்தில் Self-Attested என்று போட்டு உங்க கையெழுத்து போட்டு கொடுங்க. அப்படி கொடுத்தால் அதை ஜெராக்ஸ் எடுத்தாலும் செல்லாது.

ஏனெனில் Self-Attested + Signature இருப்பதை ஒவ்வொரு முறையும் பேனாவால் தான் எழுத வேண்டும். அப்போது தான் அது செல்லும். இனி மேல் சிம் கார்டுக்கோ வேறு எதுக்குமோ ஐடி ப்ரூஃப் தரும் போதும் இதே வழிமுறையை பின்பற்றுங்கள்.
உங்கள் பெயரில் நடக்கும் முறை கேடுகளை இதன் மூலம் தவிர்த்து விடலாம்.
சிவக்குமார் ...9944066691
(நிதி ஆலோசகர் )

நேந்துக்குறேன்

பள்ளிக்கூடம் போன பய...
பகல் முடிஞ்சும் திரும்பலையே!
வெளக்குக் கூட வச்சாச்சு
வீடு வந்து சேரலையே!

பள்ளிக்கூடம் பூட்டிக்கெடக்கு!
பெரிய பூட்டு மாட்டியிருக்கு!
பேரன் இவனக் காணாம...
பேதலிச்சு இவன் பாட்டியிருக்கு!

கொல்லப் பக்கம் போனாக்கூட...
சொல்லாமப் போனதில்ல!
புள்ள வந்து சேராம  என் உசுரு என்னதில்ல!

ஆடு மேய்க்கப் போன கூட்டம்...
அத்தனையும் வந்துருச்சே!
காட,காக்கா,குருவியெல்லாம்...
கூடு வந்து சேந்துருச்சே!

ஏழு மணி தாண்டிருச்சே!
எல்லாப் பக்கமும் இருட்டிருச்சே!
எட்டு வயசுச் சின்னப் பய...
எங்க போனான் தெரியலையே!

தகப்பனில்லாப் பிள்ளையின்னு...
தனியா எங்கயும் விட்டதில்ல!
தப்பு கிப்புச் செஞ்சாலும்...
தவறிக் கூடத் தொட்டதில்ல!

அங்க இங்க நிக்கமாட்டான்!
அதிர்ந்துகூடப் பேசமாட்டான்!
அத்த வீடு அடுத்த தெரு...
அங்க கூட போகமாட்டான்!

சந்து பொந்து ஒன்னு விடாம...
சாதி சனம் தேடுறாக!
ஆளுக்கொரு கதயச் சொல்லி...
அடி வயித்தக் கலக்குறாக!

வாத்தியாரக் கேட்டாச்சு!
வரப்புப் பக்கம் பாத்தாச்சு!
வாழத்தோப்பு வரைக்கும் கூட...
ஆளனுப்பித் தேடியாச்சு!

பொத்திப் பொத்தி வளத்த பய...
போன எடம் தெரியலையே!
சுத்திச் சுத்தித் தேடியாச்சு...
புத்திக்கொன்னும் புரியலையே!

பாவி மகன் கெடச்சான்னா...
பழனி மலைக்கு நடந்து வர்றேன்!
முடிய வழிச்சு காணிக்கையா...
முருகனுக்கு செலுத்திடுறேன்!

அய்யனாரு கோவிலுக்கு....
ஆடு வெட்ட நேந்துக்குறேன்!
பொன்னியம்மன் கோவிலுக்கு...
பொங்க வச்சுப் பூச தர்றேன்!

படக்குன்னு முழிப்பு தட்ட...
பதறியடிச்சு பாக்குறேன்!
பக்கத்துல... தூங்கிக் கெடந்த  பயல...
எழுப்பித் தூக்குறேன்!

கண்டதெல்லாம் கனவுதான்னு....
புரிஞ்சுகிட்டு சிரிக்கிறேன்!
வேர்வையெல்லாம் முந்தானைல....
வேக வேகமா தொடைக்குறேன்!

முழிப்பு மட்டும் வரலன்னா ...
என் மூச்சுக்குழி அடச்சிருக்கும்!
நெசமுன்னு நெனச்சுக்கிட்டு....
என் நெஞ்சுக்குழி வெடிச்சிருக்கும்!

நேத்திக்கடன் எல்லாத்தையும்...
நெசமாவே தீத்திடனும்!
மறுபடி இந்தக் கனவு வராம....
மாரியாத்தா காத்திடணும்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...மேடம் ஜி...அதுவும் fwd mesg ..ம் வரும்...அதிகம்  படித்தவர்கள் குழு ...வில் செய்திகள் வராது மாப்பிள ..


திங்கள், 10 ஜூன், 2019



Sivakumar Kumar.........



ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.
உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார்.
பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார்
“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி.
“ஆமாம்!.அது சரி.... இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பணக்காரர்.
“இது கோவில் கோபுரத்தில், நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை!” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.
பணக்காரர் வியப்புடன், ”நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்... முட்டாள்!” என்றார்.
“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.... அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்” என்றார் சிற்பி.
நீதி: அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்!
 —கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில்  in Udumalaippettai.

சனி, 8 ஜூன், 2019

பழைய கார் வாங்குவது எப்படி? --

 தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கினால், மாதா மாதம் கணிசமான இ.எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பாலான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல்லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்’ எனச் சொல்லப்படும் 'பழைய கார்’ நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக இருந்தால், வாங்கும் பழைய காரிலும் புத்தம் புதிய காரின் ஃபீல் கிடைக்கும்!

பிளானிங் முக்கியம்!

புத்தம் புதிய கார் வாங்க ஷோ ரூம் போனால், அங்கு நீங்கள்தான் ராஜா. உங்களுக்கு காரைப் பற்றி எடுத்துச் சொல்ல சேல்ஸ் ஆபீஸர் இருப்பார். உங்கள் வீடு தேடி டெஸ்ட் டிரைவ் கார் வரும். ஆனால், பழைய கார் விஷயத்தில் அப்படிக் கிடையாது. நீங்கள்தான் அலைந்து திரிந்து தகவல்களைப் பெற வேண்டும். அதிலும், நீங்கள் உடனடியாக முடிவு எடுத்துவிட முடியாது. நல்ல கண்டிஷனலில் இருக்கும் காரா? ஆக்ஸிடென்ட் ஆகாத காரா? இன்ஜின், கியர் பாக்ஸ், சஸ்பென்ஷன் எல்லாம் சரியாக இருக்குமா என்று ஏகப்பட்ட கேள்விகள் மனதைக் குடையும். அதனால், கார் வாங்கச் செல்வதற்கு முன்பு, தெளிவாக முடிவு எடுக்க வேண்டும்.

பட்ஜெட் மற்றும் செக்மென்ட்!

பழைய கார் விஷயத்தில், முதலில் நீங்கள் திட்டமிட வேண்டியது பட்ஜெட்தான். 'கார் என் கைக்கு வருவதற்கு முன் இந்தத் தொகைதான் என்னால் செலவு செய்ய முடியும். இதற்கு மேல் செலவு வைக்கும் என்றால், அந்த கார் எனக்கு வேண்டாம்’ என்று திட்டவட்டமாக முடிவெடுங்கள். பட்ஜெட் விஷயத்தில் சரியாகத் திட்டமிடவில்லை என்றால் என்ன ஆகும்? ஒரு பழைய கார் ஐந்து லட்சத்துக்கு விற்பனைக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 'சார், ஒரு 75,000 எக்ஸ்ட்ரா போட்டா, அதைவிட நல்ல கார் ஒண்ணு இருக்கு. அதைப் பார்க்கலாமா?’ என்பார்கள்.
லட்சங்களில் டீல் செய்யும்போது, 75,000 ரூபாய் உங்களுக்குப் பெரிதாகத் தெரியாது. அந்த காரையும் பார்க்கிறேன் என கடைசி வரை கார்களைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். கடைசியாகப் பார்த்த காரின் விலை 8 லட்சத்தில் வந்து நிற்கும். மதில் மேல் பூனை போல, எந்த காரையும் வாங்க மனமில்லாமல் குழம்பிக்கொண்டே இருப்பீர்கள். அதனால், பட்ஜெட் விஷயத்தில் கறாராக இருப்பதே நல்லது! பட்ஜட்டைப் பொருத்து காரின் செக்மென்டைத் தேர்வு செய்யலாம். செக்மென்டைப் பொருத்தும் பட்ஜெட்டைத் தீர்மானிக்கலாம். எம்யூவி, எஸ்யூவி, செடான், ஹேட்ச்பேக், சின்ன கார் என ஐந்து செக்மென்ட் கார் வகைகள் இருக்கின்றன!

ஓனரா, டீலரா?

பழைய கார் சந்தை, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அல்ல! அரசு இதைக் கண்காணிப்பதும் இல்லை. டீலருக்கு இது தொழில். உங்களுக்கு இது கனவு. டீலர் உங்களை ஒரு வாடிக்கையாளராகத்தான் அணுகுவார். ஆனால், அவருடைய நடத்தை ஒரு நண்பனைப் போல இருக்கும். டீலரிடம் பழைய கார் வாங்கச் செல்லும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா வியாபாரத்தைப் போல, இதிலும் ஏமாற்றுப் பேர்வழிகள் இருப்பார்கள். விபத்துக்குள்ளான காரைச் சரி செய்து, பெயின்ட் அடித்து புதிய கார் போல் மாற்றி விற்பவர்களும் உண்டு. உங்களால் இது விபத்தான கார் எனப் மேலோட்டமாகப் பார்த்தால் கண்டுபிடிக்கவே முடியாது. அதனால், உங்களுடன் ஒரு தேர்ந்த மெக்கானிக் அல்லது ஆட்டோமொபைல் விஷயங்கள் அறிந்த நண்பரை அழைத்துச் செல்வது நல்லது. அரிதான சமயங்களில், பழைய கார் டீலர்களிடம் சிறந்த விலைக்கு நல்ல காரும் வாங்கலாம்!

பழைய கார் டீலர்களில் இன்னொரு வகையினர் உண்டு.

கார் நிறுவனங்களே பழைய கார் டீலர்களாகச் செயல்படுகிறார்கள். டொயோட்டா - யு-டிரஸ்ட், ஹூண்டாய் - அட்வான்டேஜ், ஹோண்டா - ஆட்டோ டெரஸ், டாடா - அஷ்யூர், மஹிந்திரா - எக்ஸ் மார்ட், ஃபர்ஸ்ட் சாய்ஸ், செவர்லே - ஓகே, மாருதி - ட்ரூ வேல்யூ போன்ற நிறுவனங்கள் இப்படிப் பட்ட அமைப்புகள். இவர்களிடம் கார் வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. இவர்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போவதை விரும்ப மாட்டார்கள். எனவே, உங்களுக்கு இங்கே நல்ல கார் கிடைக்கும். மேலும் வாரன்டி, சர்வீஸ் போன்றவையும் கிடைக்கும். ஆனால், விலை கொஞ்சம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

ஓனர்!

டீலர் வேண்டாம்; அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மூலமாகவோ கார் வாங்க விரும்பினால், முதலில் ஓனரின் வீட்டுக்கு விருந்தாளி போலச் சென்று காரைப் பார்த்து வரலாம். அறிமுகமானவர்களுக்குள் நடக்கும் விற்பனை என்பதால், இரு தரப்பினரும் விலையில் விட்டுக் கொடுத்துப் போவார்கள். திருப்தி ஏற்படும் பட்சத்தில், கார் வாங்கும் படலம் இரு தரப்பினருக்கும் நல்ல அனுபவமாக அமையும். சில சமயங்களில்,  தெரிந்த நபர் மூலம் தெரியாத யாராவது கார் விற்க இருக்கும் தகவல் வரலாம். அவரிடம் நீங்கள் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், கார் வாங்கும்போது நீங்கள் குறைந்த விலைக்கு நல்ல காரை வாங்கலாம்.

பெட்ரோலா, டீசலா?

இப்போது இருக்கும் விலை நிலவரத்துக்கு, இதுதான் எல்லோருக்கும் பெரிய கேள்வி. 'காரை அடிக்கடி ஓட்டுவீங்க, ஒரு நாளைக்கே குறைந்தது ஐம்பது கி.மீட்டருக்கு மேலே சுற்றுவேன்... அப்படீன்னா, டீசல் எடுத்துக்குங்க சார். ஆனா, காரையே எப்பவாவதுதான் ஓட்டுவேன். அதுவும் லாங் ட்ரிப்புக்குத்தான்னா பெட்ரோல்தான் உங்களுக்கு சரியா இருக்கும் சார்’ - காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த வசனம் ஓரளவுக்கு உண்மை என்றாலும், இது கொஞ்சம் பழைய கார்களுக்குத்தான் சரி! டீசல் கார் என்றாலே மெயின்டெனன்ஸ் அதிகம், சத்தம் அதிகம், அடிக்கடி செலவு வைக்கும் என்பார்கள். ஆனால், இப்போது இருக்கும் லேட்டஸ்ட் டீசல் இன்ஜின்கள் ஸ்மூத்தாகவும், சத்தம் குறைவாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜினுக்கும், டீசல் இன்ஜினுக்கும் இருக்கும் அடிப்படை வேறுபாடுகளைத் தவிர, இரண்டும் இப்போது கிட்டத்தட்ட ஒரே தரத்துக்கு வந்து விட்டன.
எனவே, டீசல் கார்தான் வேண்டும் என்றால், முடிந்தவரை குறைந்த கிலோ மீட்டர்களே இயங்கிய லேட்டஸ்ட் மாடலாக எடுப்பது நல்லது. பெட்ரோல் கார் என்றால், சர்வீஸ் இன்டர்வெல் சரியாக உள்ள காராகத் தேர்ந்தெடுங்கள்.

டெஸ்ட் டிரைவ்

மறக்காமல் டெஸ்ட் டிரைவ் செய்துவிடுங்கள். இது காரினுள் இருக்கும் பல பிரச்னைகளைக் கண்டுபிடிக்க உதவும். காரில் ஏதாவது அப்-நார்மல் சத்தம் வருகிறதா எனக் கவனியுங்கள். நீங்களேகூட சில விஷயங்களை ஆராய்ந்து கண்டுபிடிக்கலாம். மேடு- பள்ளங்களில் ஓட்டிப் பாருங்கள். இது சஸ்பென்ஷன் நல்ல நிலைமையில் உள்ளதா என அறிய உதவும். பிரேக், கிளட்ச் போன்றவற்றை நன்றாகச் சோதியுங்கள். வேகமாக ஓட்டிப் பார்த்து, கார் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்றும் பாருங்கள்!

வரலாறு!

கார் ஓனரிடம் சர்வீஸ் ரெக்கார்டுகளை வாங்கிப் பாருங்கள். இது, கார் சரியாகப் பராமரிக்கப்பட்டு இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும். மேலும், எதற்காவது இன்ஷூரன்ஸ் கிளைம் செய்திருக்கிறார்களா என்று விசாரியுங்கள். சர்வீஸ் வரலாறைப் பார்த்தால், முக்கியமான பாகம் இதற்கு முன்பு பழுதாகி உள்ளதா எனக் கண்டு பிடிக்கலாம்.

கார் வாங்கியாச்சு... அடுத்து?

கார் வாங்கியவுடன் பலரும் வேலை முடிந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் நிஜம் அப்படி இல்லை. கல்யாணத்தில் தாலி கட்டிய பிறகும் எப்படி எண்ணற்ற சடங்குகள் இருக்கிறதோ, அது போல கார் வாங்கிய பிறகும் சில சடங்குகள் உண்டு. முதலில் என்.ஓ.சி, இன்ஷூரன்ஸ், டெலிவரி நோட், ஓனர்ஸ் மேனுவல், ஆர்.சி போன்ற சமாச்சாரங்களை எல்லாம் கைப்பற்றுங்கள். தாமதம் செய்யாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குச் சென்று, காரை உங்கள் பெயருக்கு மாற்றிப் பதிவு செய்யுங்கள். அதன் பின்பு, இன்ஷூரன்ஸ் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண் டும். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு சென்று, முழுமையாக செக்-அப் செய்து விடுங்கள்.

அப்புறம் என்ன..? ஆசைதான் நிறைவேறியாச்சே... காரில் பயணிப்பதை குடும்பத்துடன் ரசித்து அனுபவியுங்கள்

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
வீடும் மற்றும் கார்  நிதியில்  பிரிவு ..
9944066681
அன்பு என்பது,,,

நான்  கோவையில் பணிபுரியும்  போது நானும் என் ஷ்யாமும்  வ .உ .சி  மைதானத்தில்  சர்க்கஸ் பார்க்க சென்றோம்.

டிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம். 

கடைசியாக எங்களுக்கும் டிக்கட் கவுண்ட்டருக்கும் இடையில் ஒருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தார். அவருடன் வந்த அவருடைய குடும்பம் என்னை மிகவும் ஈர்த்தது. 

மொத்தம் 2 குழந்தைகள்  இருந்தார்கள், அனைவருமே பணிரெண்டு வயதுக்கு உள்ளானவர்கள். 

அவர்கள் உடை அணிந்தவிதம் மிகவும் டாம்பிகமாக இல்லாவிட்டாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

அந்த குழந்தைகள் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டார்கள்.வரிசையாக இரண்டு  பேராக அவர்கள் பெற்றோர்கள் பின்னால் நின்று கொண்டு வந்தார்கள். 

அவர்கள் அங்கிருந்த மிருகங்களையும், ஜோக்கர்களின் புகைப் படத்தையும் பார்த்து ஆர்வத்துடன் பேசிக் கொண்டு வந்தார்கள்.

இன்னும் சிறிது நேரத்தில் தாங்கள் அவற்றை நேரிடையாக காணப் போவதை பற்றி பேசி மகிழ்ந்து கொண்டு வந்தார்கள். 

அவர்கள் பேச்சிலிருந்து, அவர்கள் இதுவரை சர்க்கஸுக்கு இதற்க்கு முன் வந்ததில்லை என்பது நன்றாக புரிந்தது, அவர்களுடைய மிக பெரிய வாழ்க்கை சந்தோஷமாக இதனை கருதினார்கள். 

அந்த குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பெருமையோடும் பூரிப்போடும்  வரிசையின் முதலில் நின்று கொண்டிருந்தார்கள். 

அந்த தாய் அவளது கணவனின் கைகளை நன்றி உணர்வோடு பற்றிக் கொண்டிருந்தாள். அவள் கணவன் அவனது குடும்பத்தின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான். 

கவுண்டரில் இருந்த பெண் அந்த நபரிடம் எத்தனை டிக்கட் வேண்டும் என்று கேட்டாள். உடனே அவர் குழந்தைக்கான டிக்கட் இரண்டு , பெரியவர்களுக்கான டிக்கட் இரண்டு என்று கூறினார். கவுண்டரில் இருந்த பெண்ணும் அதற்கான பணத்தை கணக்கிட்டு கூறினாள்.

அவர் அவருடைய மனைவியிடம் நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்னே செல் என்று கூறிவிட்டு, மீண்டும் அந்த கவுண்டரில் இருந்த பெண்ணிடம் எவ்வளவு தொகை என்று கேட்டார். 

அந்த நபரிடம் போதுமான பணம் இருக்கவில்லை. அவருக்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. சந்தோஷத்தில் இருக்கும் தன குழந்தைகளிடம் எப்படி சென்று இதனை கூறுவது என்று புரியாமல் தவித்தார். 

இதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நான் , என் பாக்கேட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து தரையில் போட்டேன் . (நாங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி பெரிய செல்வந்தர் எல்லாம் இல்லை). 

நான்  குனிந்து அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்து, அங்கிருந்த அந்த தந்தையிடம் கொடுத்துவிட்டு.. "சார், இந்த பணம் உங்க பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது" என்றேன் . 

அந்த தந்தைக்கு  நன்றாக புரிந்தது என்னிடம்  உதவும் மனநிலை. அவர் எங்களிடம் யாசகம் கேட்கவில்லை, எனினும் அந்த கையறுந்த நிலையில் அவரால் அதை மறுக்க முடியவில்லை. 

அவர் எனது  கண்களை நேராக பார்த்து, என்  இரணடு கைகளையும்  பணத்துடன் கைகளுக்குள் வைத்து கண்களில்  ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியவாறே, "நன்றி... மிக்க நன்றி சார், இந்த பணம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும்  இப்பொழுது மிகவும் மதிப்பில்லாதது" என்றார். 

நானும் என் ஷ்யாமும் சர்க்கஸு சந்தோசமாக பார்த்துவிட்டு  பைக்கில் வீட்டிற்கு திரும்பினோம். 
 அந்த நாளை எண்ணி அடைந்த சந்தோஷத்திற்கு, மனநிறைவுக்கும் அளவே இல்லை. 

அன்று நான் கற்றுக் கொண்டேன் "பிறருக்கு உதவுவதில்" உள்ள சந்தோஷத்தின் மதிப்பை. 

அன்பு எனப்படுவது.. "பிறரிடம் இருந்து பெறுவதில் இல்லை, பிறருக்கு கொடுப்பதிலேயே உள்ளது".

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681...

செவ்வாய், 4 ஜூன், 2019

வீடு கட்டுவதற்கு ஆகும் செலவைக் குறைப்பது எப்படி?
************************************************
குறைந்த செலவில் வீடு கட்டுவது என்றவுடன் இரண்டாம் தரப் பொருட்களைப் பயன்படுத்தித் தரம் குறைவாகக் கட்டுவது என்று எண்ணி விடாதீர்கள். நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயர்ந்த தரத்துடன் குறைவான கட்டுமானச் செலவில் வீடுகளை எளிதாகக் கட்டலாம்.
கட்டுமானச் செலவைப் பொதுவாக இரண்டாகக் கூறலாம்.
1) மூலப்பொருட்களுக்கு ஆகும் செலவு
2) வேலையாட்களுக்கு ஆகும் செலவு
செலவைக் குறைக்கும் பொது வழிகள்:
சுற்றுப்புறத்தில் கிடைக்கும் கட்டுமானப்பொருட்களைக் கொண்டு மூலப்பொருட்களுக்கு ஆகும் செலவையும் முறையான திட்டமிடல் மூலமாக வேலையாட்களுக்கு ஆகும் செலவையும் கணிசமான அளவு குறைக்க முடியும்.
23 செ.மீ. அகலத்தில் சுவரைக் கட்டுவதற்கு மாற்றாகப் பதினைந்து செ.மீ. சுவரைக் கட்டலாம். இதன் மூலம் தரைப்பரப்பு(‘Floor Area’)ம் அதிகமாகும்.
செங்கலுக்கு மாற்றாக நமது சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் உள்ளீடற்ற பைஞ்சுதைக் கட்டிகளை(‘Cement Blocks’)ப் பயன்படுத்தலாம்.
மரச்சாளரங்களுக்கு மாற்றாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வலுவூட்டிய திண்காரைச் (RCC) சட்டங்களைப் பயன்படுத்தலாம்.
வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் முன்னதாகத் திட்டமிட்டு அமைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம்.
வீட்டின் அழகைக் காட்டிலும் இன்றியமையாத பகுதிகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டும். அழகைக் கூட்ட நினைத்தால் செலவையும் கூட்ட நினைக்க வேண்டிவரும்.
அடித்தளம்:
அடித்தளத் தூண்களுக்காக மூன்று முதல் நான்கு அடி வரையிலும் ஆறு விரலம்('Inch') தடிமனிலும் சுதை அமைப்பதற்கு மொத்தச் செலவில் பத்து முதல் பதினைந்து விழுக்காடு ஆகும். சரளை மண், செம்மண் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டு அடி ஆழத்தில் கருங்கல் அடித்தளம் அமைப்பதன் மூலம் இச்செலவைக் குறைக்க முடியும்.
வளைவு அடித்தளத்திற்கு (‘Arch Foundation’) சாதாரண மண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் நாற்பது விழுக்காட்டளவிலும் கீழ் அகன்ற நிலைத்தூண்களுக்குக் கரிசல் மண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் இருபது முதல் இருபத்தைந்து விழுக்காட்டளவிலும் செலவைக் குறைக்கலாம்.
அடிப்பீடம் (‘Plinth’):
மண்ணில் இருந்து ஓரடி வரையிலும் 1:6 என்னும் அளவில் கலவையைப் பயன்படுத்தலாம்; அடிப்பீடத் தளத்தை (‘Plinth Slab’) நான்கு முதல் ஆறு விரலம் வரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்; இவ்வாறு செய்வதன் மூலம் முப்பது முதல் ஐம்பது விழுக்காட்டளவு சேமிக்க முடியும். மேலும் சுவரைச் சுற்றி சுதைத்தளத்தை அமைப்பதன் மூலம் மண்ணரிப்பையும் தடுக்க முடியும்.
சுவர் எழுப்புதல்:
ஆறு முதல் ஒன்பது விரல அளவில் வெளிச்சுவரையும் நான்கு விரல அளவில் உள்சுவரையும் அமைக்கலாம். செங்கலைப் பயன்படுத்துவதற்கு முன் இருபத்து நான்கு மணிநேரம் ஊற வைத்துவிடுங்கள்.
எலிப்பசைச் சுவர் (‘Rat Trap Bond wall’):
இது ஒரு குகைச் சுவர் ஆகும்; இது அதிக வெப்பத்தையும் செங்கல் பயன்பாட்டையும் குறைக்கும். எலிப்பசைச் சுவரை சாதாரண பிளண்டேசு சுவர் பிணைப்புடன் (‘Flemish Bond’) ஒப்பிட, இருபத்தைந்து விழுக்காட்டளவில் செலவைக் குறைக்க முடியும். மேலும் எலிப்பசைச் சுவர், கண்கவர் தோற்றத்தையும் கொடுக்கும்.
சுதைச் சுவர்:
செங்கலை உருவாக்கத் தேவைப்படும் எரிபொருளில் மூன்றில் ஒரு பங்கே சுதைச் சுவருக்கு (‘Concrete Block’)த் தேவைப்படும்; இத்துடன் வெளிப்பூச்சும் தேவைப்படாது. இவ்வாறு பதினைந்து முதல் இருபது விழுக்காட்டளவில் செலவைக் குறைக்க முடியும்.
கதவும் சாளரங்களும்:
மரச்சாளரங்களுக்கு மாற்றாகச் சுதை(‘Concrete’), இரும்பு ஆகியவற்றில் சட்டங்களை அமைப்பதன் மூலம் முப்பது முதல் நாற்பது விழுக்காட்டளவுச் செலவு குறையும்.
விட்டக்கல் (‘Lintels’):
வலுவூட்டப்பட்ட சுதை விட்டக்கல்லை (‘RCC Lintels’)த் தவிர்த்து செங்கல் வளைவுகளை அமைப்பதன் மூலம் முப்பது முதல் நாற்பது விழுக்காட்டுச் செலவைக் குறைத்து விடலாம். விட்டக்கல் அழகான தோற்றத்தையும் அளிக்கும் என்பது கூடுதல் நன்மையாகும்.
கூரை வேய்தல்(‘Roofing’):
12.5 செ.மீ அளவில் வலுவூட்டப்பட்ட சுதைச் சுவருக்கு மாற்றாக நிரப்பி(‘Filler’)க் கூரையும் முன் வார்ப்பு (‘Precast’)ப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் இருபத்தைந்து விழுக்காடு வரை செலவைக் குறைக்க முடியும்.
நிரப்பிக் கூரை (‘Filler Slab’):
செங்கல், ஓடு, சுதைக் கட்டி ஆகியவற்றைக் கூரையின் கீழ்ப்பாகத்தில் பயன்படுத்தலாம். இவ்வாறு கூரைக்குத் தேவைப்படும் சுதை அளவைக் குறைக்கலாம். இதனால் கூரைக்கு அழகிய தோற்றம் கிடைப்பதுடன் கூரையின் கீழ்ப்பாகத்தில் இவற்றைப் பயன்படுத்துவதனால் சுதை வலிமையும் பாதிக்கப்படாது.
குறிப்பு: இதுவரை நாம் பார்த்தவற்றை உங்கள் பொறியாளர், வடிவமைப்பாளர் ஆகியோருடன் கலந்து பேசிப் பயன்படுத்துங்கள்.

V .K .சிவக்குமார் -(வீட்டுக்கடன் பிரிவு )
9944066681...whatsapp ..9944066681..


அழகான வீடு கட்டுவது எப்படி ?


எனக்கு பிடித்த பறவை - ஏன்!
நம்பிக்கை, தன்னம்பிக்கை, விடா முயற்சி, வீரம், கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமை, பரிபூரணத்துவ மேதை, விட்டு கொடுத்தல்... இன்னும் ஏராளம் இப்பறவைக்கும் இருக்கும் ஆற்றல்.
My favorite bird - why!
Belief, self-confidence, diligence, Brave, unity within the husband's wife, perfectionist genius, and more.....
நம்பிக்கை, தன்னம்பிக்கை:
எங்கே வீடு கட்டுவது, எப்படி கட்டுவது, இது ஏற்ற இடம் தானா, இன்னல்கள் இருக்குமே, நம்மை சுற்றி ஆபத்து இருக்குமே.. இருக்கட்டும், காற்று வீசுமே, இடி மின்னல் இருக்குமே... இவை எல்லாம் இருக்கத்தான் செய்யும்... இடத்தை தேர்வு செய்த பின்னர்.. வீடு கட்டுவதற்கான முயற்சி தொடங்கியதும், அதற்கான மூலப்பொருளை தேடி சென்று கொண்டு வந்து, விடா முயற்சியோடு, பரிபூரணத்துவுடன் கட்டி முடித்து, தன் கூட்டை கட்டும்போதே எத்தனை இன்னல்கள், அவை எல்லாம் தகர்த்தெறிந்து, பெண் குருவி முட்டை இட்டு, அடை கார்த்து, பாதுகாத்து, ஆண் பறவை பாதுகாக்க, பெண் பறவை இறை தேடி சென்று, தன குழந்தைகளுக்கு கொடுத்து, வளர்த்து, அதை பாதுகாத்து, அதற்கு இறக்கை முளைத்தவுடன், தன் அழகான வீட்டை வேறு பறவைகளுக்கு விட்டு கொடுத்து, எங்கோ அழகாக பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது...
இப்படி இப்பறவைகளுக்கு இருக்கும் நம்பிக்கை, ஆற்றல், விடா முயற்சி ஏன் ஆறரிவு பலம் படைத்த மனிதனுக்கு இல்லாமல் போய் விட்டது.... ?
வாழுங்கள் நம்பிக்கையோடு!
பொறாமை புறம் தள்ளி,
அடுத்தவரின் வெற்றியை ஆராயாமல்
உங்கள் தோல்வியை ஆராயுங்கள், வெற்றி உங்களை வந்தடையும்,
நான் வெற்றி பெற்று விட்டேன் என்று கர்வம் கொள்ளாதீர்கள்..அஃகர்வமே அக்ககணமே உங்களை அடிபாதாளத்தில் தள்ளி விடும்.
பறவையை நேசியுங்கள், அவர்களை போல் வாழுங்கள்
நன்றி

சிவக்குமார் ...(வீட்டுக்கடன் பிரிவு )
9944066681..Whatsapp..9944066681

திங்கள், 3 ஜூன், 2019

குழந்தைகளுக்கு #சமைக்க கற்றுக் கொடுங்க...!!
😁
பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார் படுத்தலாம்.

மகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம்.

ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். முதலில் கியாஸ், மண்எண்ணை அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும்.

தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும்.

இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும். இதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது,காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம்.

நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.

இதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும்.

பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும். எண்ணெயை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும்.

சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும்.

இது தவிர, இப்போது குழந்தைகளுக்கான தனியார் சமையல் வகுப்புகள் நிறைய இருக்கின்றன. குழந்தைகளுக்குக் கற்றுத்தர நேரமில்லாத பெற்றோர்கள், இவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.!