ஞாயிறு, 31 ஜனவரி, 2021

 இன்றைய ஞாயிறு ...31-01-2021-உடுமலைப்பேட்டை 

என் அருமை தம்பி சிவராஜ் -எரிசனம்பட்டி குடும்பத்தாரின் இல்ல விழா ..

தம்பியின் மகள் S .R .வர்ஷா .பூப்பு நன்னீர்ட்டு விழா .கரட்டுமடம் .S .S மகால் மண்டப விழாவிற்கு செல்லும் பொழுது ,சிறுவர் காலம் மலரும் நினைவுகளாக தற்பொழுதும் எரிசனம்பட்டி வீட்டை கடக்கும்போது பசுமையாக உள்ளது ..இன்று நம் சொந்தங்களுடன் கலந்துகொண்டு பார்த்து ..கேட்டு..நலம் விசாரித்து  பேசியது மகிழ்ச்சி .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681...

செவ்வாய், 26 ஜனவரி, 2021

 இன்று அருமையான திருமண விழா ....

பொள்ளாச்சி கொல்லப்பட்டி -ராமநாதபுரம்மாவட்டம் -வள்ளக்குளம் 


அருமை தம்பி அருள் பிரகாஷ் -முத்துப்பிரியா ..பொள்ளாச்சி புளியம்பட்டி பொம்மீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழா ..நீண்ட நாட்களுக்கு பிறகு ஆத்ம திருப்தியுடன் பொறுமையாக ..(அவசர உலகம் ) சில சொந்தங்களுடன் உரையாடிவிட்டு ..இரவு உணவு வயிற்றுக்கு ருசியுடன் பசித்து ,ரசித்து  மனதிற்கு நிறைவாக சொந்தங்கள் பரிமாறிய உணவு சாப்பிட்டது அருமை...புதுமணமக்களுக்கு வாழ்த்திவிட்டு வந்தது இன்றைய நாள் சிறப்பு ..


என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 

9944066681.. 

புதன், 20 ஜனவரி, 2021

 கேள்வி : வீட்டு கடன் பாக்கி தொகையினை மொத்தமாக ஒரே தவணையில் சுமார் 4 அல்லது 5 லட்சம் செலுத்தி கடனை அடைக்கலாமா. அச்சமயம் ஏதாவது concession in interest அல்லது தொகை குறைப்பு கிடைக்குமா?


என் பதில் :....

இந்த கேள்விக்கான பதிலுக்கு செல்லுமுன், வீட்டுக்கடன் பற்றிய சில விஷயங்களை முதலில் தெரிந்து கொள்வோம்:

உங்கள் மாத வருமானத்துக்கேற்ற மாதிரி வீட்டுக்கடன் வாங்கவும். முடிந்த வரை வீட்டின் மதிப்பில் 30% வரை கையிருப்பிலிருந்து தேத்தி விடவும். சில தேசிய வங்கிகள் வீட்டின் மதிப்பில் 80% தான் கடனே வழங்கும்.

எல்லா வங்கிகளும், வீட்டுக் கடன் என்னவோ 20/30 வருடங்களுக்கு தருவார்கள். அதற்காக 20வது வருடம் தான் கட்டி முடிப்பேன் என்று சபதம் எடுக்காதீர்கள்.

எந்த வங்கியாக இருந்தாலும், நாம் கட்டும் மாதாமாதம் இ.எம்.ஐ(EMI) என்ற தொகையில் பெரும்பகுதியை, வாங்கிய கடனின் வட்டிக்குத் தான் பிடித்துக் கொள்வார்கள்.

எ.கா: EMI இருபதாயிரம் மாதம் கட்டுகிறீர்கள் என்றால் அதில் 80% அதாவது 16 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு போயிடும், மீதி 4 ஆயிரம் அசலுக்கு.

இது பெரிய தேவ ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் மாதாந்திர வீட்டுக்கடன் அறிக்கையில், வங்கிகள் தெளிவாக அனுப்புவார்கள்.

காரணம், நீங்கள் 20 வருடம் கட்டப் போகும் வட்டி தான், அந்த வங்கியின் வருமானம். எனவே வட்டியைத் தான் முதலில் வசூலிக்க நினைப்பார்கள். எனக்கு தெரிந்து, அரசு மற்றும் தனியார் வங்கிகள் Concession in Interest தருவதில்லை.

ஆகவே, உங்களுக்கு ஏதேனும் அலுவலக போனசோ அல்லது திடீரென்று பூர்வீக சொத்து விற்றதில் உங்கள் பங்காக, கணிசமான தொகை கையில் வந்தால், உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு, உங்கள் வீட்டுக் கடனில் அந்த பணத்தை, எந்த அபராதமுமின்றி சேர்ப்பிக்க முடியுமா? என்று முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் மனசு மாறுவதற்குள், அல்லது

"ஜி.ஆர்.டியில் வளையல் திருவிழா நடக்குது. ஆர் யூ ஓகே பேபி?" என்று நயன்தாரா கேட்பதை பார்த்து, நீங்கள் மனசு மாறுவதற்குள், உடனே சென்று கட்டி விடுங்கள்.

இதனால் உங்களுக்கு என்ன லாபம்?

நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் 25 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது அதில் ஐந்து லட்சத்தை கட்டி விட்டால், உங்கள் மாதாந்திர இ.எம்.ஐ அப்படியே இருக்கும், ஆனால் வீட்டுக் கடனின் கால அளவு (மாதங்கள்) குறைந்து விடும்.

இப்படியே வருடத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை என கணிசமான தொகையை செலுத்தி வாருங்கள்.

கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், எட்டு வருடத்தில் அதிக வட்டி கட்டிக் கொண்டிருக்காமல், உங்கள் முழு வீட்டுக் கடனையும் அடைத்து விடலாம்.

இது எனது சொந்த அனுபவம். எட்டு வருடத்தில் வீட்டுக் கடன் அடைத்து, வங்கியிலிருந்து வீட்டு பத்திரத்தை வாங்கும் பொழுது கிடைக்கும் நிம்மதி இருக்கே! அதெல்லாம் அனுபவித்து தான் தெரிந்து கொள்ளணும்.

வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்கலாம், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நமது நிதியை நிர்வகித்தால், எட்டு வருடத்தில் நீங்கள் ஹவுஸ் ஓனர்.

மொத்தமாக 35 லட்சம் அல்லது 40 லட்சம் சேர்த்து விட்டு தான் வீடு வாங்குவேன் என்று அடம் பிடித்தால், அடுத்த மூன்று வருடத்தில் வீட்டின் விலை மேலும் 10 லட்சம் உயர்ந்து விடும்.

வீட்டு கட்டுமான பொருட்களின் விலை, வேலையாட்கள் கூலி என எல்லாமே உயர்ந்து விடும்.

என்றும் அன்புடன் 

உடுமலை 

சிவக்குமார் V.K

வீட்டு கடன் பிரிவு 

உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர் 

அழைப்பு எண் :9944066681..👍⛱.WHATSAPP.. :9944066681🏘

Email:siva19732001@gmail.com🌱

திங்கள், 18 ஜனவரி, 2021

கேள்வி : வீடு வாங்கியவுடன் நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்ன ?...


என் பதில் :.....நீங்க செய்ய வேண்டிய முக்கியமான வேலை இதுதான்..!
வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தைச் செய்து பார் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். இந்த இரண்டுமே நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சரி கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கிவிட்டோம். அதன் பின்னர்ச் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் என்ன என்பது குறித்துப் பலருக்குத் தெரிந்திருக்காது. எனவே வீட்டை வாங்கியவுடன் உடனே என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்துத் தற்போது பார்ப்போமா!!
பத்திரத்தைப் பத்திரமாக வைக்க வேண்டும்:
ஒரு வீட்டின் பத்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதனால்தான் அதற்குப் பத்திரம் என்றே நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் பத்திரத்தின் ஒரிஜினலை தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று ஜெராக்ஸ் காப்பிகள் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒருவேளை நீங்கள் வீட்டின் மேல் வங்கி லோன் வாங்குகிறீர்கள் என்றால் வங்கிக்கு ஒரிஜினலை சமர்ப்பிக்கும் முன்னர்த் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
டிஜிட்டல் மயத்திற்கு மாற்றுங்கள்:
இப்போது உலகமே டிஜிட்டல் மயத்திற்கு மாறிய பின் உங்கள் டாக்குமெண்ட் மட்டும் டிஜிட்டலில் மாறாமல் இருக்கலாமா? முதல் காரியமாகப் பத்திரத்தை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ஒரு காப்பியை வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் காப்பி நாளடைவில் மங்கிவிடும். ஆனால் டிஜிட்டல் காப்பி உங்கள் தலைமுறைக்கும் ஃப்ரஷ் ஆக இருக்கும்.
வீட்டு லோன் வாங்கும் முன் என்ன செய்ய வேண்டும்:
வீட்டு லோன் வாங்க முடிவு செய்துவிட்டால் வங்கி கேட்டிருக்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் சமர்ப்பிக்கவும், ஒவ்வொன்றாகச் சமர்ப்பிக்க வேண்டாம். மொத்த டாக்குமெண்ட்களும் தயாரானதும் சமர்ப்பியுங்கள். ஆனால் அதற்கு முன்னர் அனைத்து முக்கியமான டாக்குமெண்ட்களையும் தேவையான காப்பிகளை எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். வங்கியிடம் நீங்கள் லோன் ஒப்பந்தம் போடும் முன் இவைகளைச் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்டர்மார்க் மிகவும் அவசியம்:
ஒரு வீட்டை வாங்கி முடித்தவுடன் உடனே நாம் செய்ய வேண்டிய அடுத்த வேலை வீட்டின் சொத்துவரியில் உள்ள பெயர் மாற்றம், மின்சாரக் கனெக்ஷனில் உள்ள பெயர் மாற்றம் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதற்கெனச் சில ஏஜண்டுகள் இருக்கின்றனர். ஆனால் அவர்களை அணுகும்போது அடோப் ரைட்டரில் வாட்டர் மார்க் செய்யப்பட்ட காப்பிகளை மட்டும் கொடுக்கவும். ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து ஏஜண்டுகளிடம் கொடுத்தால் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே சுதாரிப்பாக இருந்து கொள்ளுங்கள்
இதையும் நீங்கள் கண்டிப்பாகச் செய்யணும்:
ஒரு வீட்டை வாங்கி முடித்ததும் டயர்டு ஆகி ஓய்வு எடுக்கத் தொடங்கிவிடக்கூடாது. வீட்டுப் பத்திரம் கைக்கு வந்தவுடன் நீங்கள் அந்த வீட்டின் முக்கியமான டாக்குமெண்டுகளை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டும் குறிப்பாகத் தண்ணீர் கனெக்ஷன், எலக்ட்ரிக் கனெக்ஷன், சொத்து வரி பெயர் மாற்றம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் என்.ஓ.சி ஆகியவற்றைப் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.
வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்:
வீடு வாங்கியவுடன் பத்திரம் உங்கள் பெயருக்கு மாறியவுடன் புதிய வீட்டின் முகவரியை உங்கள் அனைத்துச் சான்றிதழ்களிலும் மாற்றிவிட வேண்டும். குறிப்பாகச் சொத்துவரி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு, மற்றும் உங்களிடம் உள்ள அனைத்து முக்கிய ஆவணங்களிலும் புதிய முகவரி இருக்கும்படி மாற்றம் செய்யுங்கள். இது சின்ன வேலைதானே என்று அசால்ட்டாக இருந்துவிட வேண்டாம். இது மிகவும் அவசியமானது என்பதை நீங்கள் பின்னால் உணர்வீர்கள்
குடியிருப்பாளர்கள் சங்கத்திலும் பெயர் மாற்றம்:
நீங்கள் வீடு வாங்கிய பகுதியில் குடியிருப்பாளர்கள் சங்கம் இருந்தால் உடனே அதில் உங்கள் வீட்டின் ஜெராக்ஸ் காப்பியை கொடுத்து இணைந்துவிடுங்கள். சங்கத்தின் நிர்வாகிகளிடம் இதுகுறித்த மேல்விபரங்களைக் கேட்டு இதையும் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் வேலை முடிந்தது. அப்பாடா!!! இப்போது புரிகிறதா முதல் லைனில் உள்ள வீட்டை கட்டிப்பார்! என்ற பழமொழியின் அர்த்தம்.

சிவக்குமார்........
வீட்டு கடன் பிரிவு
உடுமலைப்பேட்டை ,பொள்ளாச்சி ,கோயம்பத்தூர்
அழைப்பு எண் :9944066681...WHATSAPP.. :9944066681
Email:siva19732001@gmail.com

செவ்வாய், 5 ஜனவரி, 2021

தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..(தளி எத்தலப்பர் )

வீரத்தின் விளை நிலம் ...உடுமலையை ஆண்ட மன்னரின் ...புத்தகம் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் கரங்களில் ... உடுமலை


யின் வரலாறு ....மகிழ்ச்சி ....

முழுமையான பாடலும்;

 முழுமையான பாடலும்; 

மெட்ராத்தி,  குடிமங்கலம், கொங்கல்நகரம், கோட்டமங்கலம்,  கல்திட்டை,  திருமூர்த்தி மலை, கொண்டக்கடலை காடு, கொத்துமல்லிகாடு,  பொன்னாலம்மன் சோலை, முள்ளுப்பாடி  அருகே,  தென்னை மரக்காடு,  திருமூர்த்தி அணை,  சஞ்சீவராயன் மலை,   மானுப்பட்டி,   ஜம்புமலை, கல்லாபரம், வயல்வெளி, சூட்டிங் ஸ்பாட்,  தொட்டி அன்னவாய்க்கால்,  பொன்னி வளக்கரை, மதகடிபுதூர் ஓவியங்கள்,  பனைமரங்கள்,  இராமகுளம்,  குமரலிங்கம் பெயர்ப்பலகை,  காசி விஸ்வநாதர் கோயில், நடராஜர் கோயில்,  ரோட்டு மேலிருக்கும் கோயில்,  கொடுமம்  ஆத்துப்பாலத்திலிருந்து  ஒரு சூட்,  கல்லாபுரம் ஆத்துப்பாலத்திலிருந்து ஒரு சூட்,   கண்ணாடிப்புத்தூர் கல்திட்டை,  சோழமாதேவி கோயில்,  கணியூர் சிவன் கட்டாயம்,  காரத்தொழுவு சிவன் கோயில்,  மெட்ராத்தி கல்வட்டம்,  வீரகம்பம், சோமவாரப்பட்டி கோயில் ,உடுமலைப்பேட்டை ரயில் நிலையம், சந்தை,  மக்கள் கூடும் இடங்கள், பிரசண்ட விநாயகர் கோயில், பூர்வீகப் பள்ளிவாசல்,  குட்டை பள்ளிவாசல்,  பழைய பேருந்து நிலையம் பள்ளிவாசல்,  சர்ச், தென்னிந்திய திருச்சபை,  ஆர்.சி.  பழனி ஆண்டவர் மில், திருமூர்த்தி மில்,  போகும் வழியில்  இருக்கும் பஞ்சாலைகள், சிறுவர்கள்  கூட்டம், மாடுகள், ஆடுகள் மந்தை, நீரிறைச்சல், நீரருவி,