மேடை பேச்சு......
இன்று கொங்கு நாடு கல்லூரியின் சிறப்பு அழைப்பாளராக நானும் என் நண்பர் பிரபு அவர்களும் சென்றிருந்தோம்...பள்ளி மற்றும் கல்லூரி என்றாலே பயம் கலந்த மரியாதை...மனதில் ஓட்டிகொள்கிறது...நாமும் கல்லூரி வாழ்கையை கடந்தவர்கள் தானே .. கல்லூரியின் படிக்கட்டில் ஏறும் போதே ஒரு மாணவர் வணக்கம் சார்.......!!!!!! ஒருஇழு ..இழுத்து சொன்னார்...இருந்தாலும் பயத்தை வெளி காட்டிகொள்ளக்கூடாது என்று நடையை கட்டினோம் ..அதற்குள் நண்பர் வணிக மேலாண்மை துறை தலைவர் அவருடைய அறைக்கு அழைத்து கொண்டு போய்விட்டார்...பல பள்ளியில் ஆசிர்யர்களுக்கு என் துறை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்சிகள் போதுகூட இந்த பயம் வருவதில்லை ...கல்லூரி என்றலே கொஞ்சம் ஜெர்க் ஆகிறது ..வணிக மேலாண்மை மாணவர்கள் பரஸ்பரநிதி ,தனி நபர் வருமானம், வீட்டுகடன் ,வாகனகடன் ,கல்வி கடன் ,காப்பீடு ,வைப்புத்தொகை ,இத்தனையும் பாடப்புத்தகத்தில் படித்ததை இன்று நடை முறை வாழ்க்கையோடு பாடம் நடத்தும் போது கவனமாக கேட்டார்கள் ...எதிர் காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி பெற போகிறோம் என்று இருந்த பயத்தை கொஞ்சம் போக்கினோம்...பேச வாய்ப்பு அளித்த கொங்கு நாடு கலை கல்லூரி-க்கும் வணிக மேலாண்மை துறை தலைவர் திரு.பிரபாகர் கந்தசாமி அவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் என் நன்றிகள்.. .